உணர்வுபூர்வமான குடும்ப கதை.. சர்ப்ரைஸ் விஷயங்கள் - 96 இரண்டாம் பாகம் கதைக்களம் எப்படி இருக்கும்?
காதல் இல்லாமல் குடும்பம அமைப்பில் உணர்வுப்பூர்வமான கதையாக 96 இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. மேலும் படத்தில் சில சர்ப்ரைஸ் ஆன விஷயங்களும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018இல் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த காதல் காவியாக 96 படம் உள்ளது. பலராலும் கொண்டாடி தீர்க்கப்பட்ட இந்த படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.இதன் கன்னட பதிப்பில் நடிகை பாவனாவும், தெலுங்கு பதிப்பில் சமந்தாவும் ஹீரோயின்களாக நடித்திருப்பார்கள்.
இந்த படம் இந்தியிலும் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறு ஆண்டுகள் கழித்து 96 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்போவதாக முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான கதை பற்றி முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
96 இரண்டாம் பாகம் கதைக்களம்
96 படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இரண்டமாக பாகம் படத்தின் கதைக்களம் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் நடக்கும். படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளார் கூறப்படுகிறது. அத்துடன் முதல் பாகத்தில் கதையின் நாயகியான த்ரிஷா தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களை சந்திப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருவதாக கதை அமைந்திருக்கும். மேலும் படத்தில் கூடுதலாக சில சர்ப்ரைஸ் விஷயங்களும் இடம்பிடித்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது
