தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Rambha : 90ஸ் களின் கனவு கன்னி.. தொடை அழகி.. முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா பிறந்தநாள் இன்று!

HBD Rambha : 90ஸ் களின் கனவு கன்னி.. தொடை அழகி.. முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Jun 05, 2024 06:30 AM IST

Rambha birthday today : 7 ஆண்டுகள் கொடி கட்டி பறந்த ரம்பாவிற்கு, அதன் பின் சினிமா வாய்ப்புகள் கடுமையாக சரிந்தன. வாய்ப்புகள் குறைந்ததால் வாழ்க்கையை தொடங்கலாம் என முடிவு செய்த ரம்யா, இந்திரக்குமார் பிரேமானந்தன் என்கிற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

90ஸ் களின் கனவு கன்னி.. தொடை அழகி.. முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா பிறந்தநாள் இன்று!
90ஸ் களின் கனவு கன்னி.. தொடை அழகி.. முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா பிறந்தநாள் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

தொடை அழகி ரம்பா

நடிகை ரம்பா ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில்  நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான 'ஆ ஒக்கடு அடக்கு' என்ற தெலுங்குப் படமாகும்.

மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன். தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித்தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர்.

ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து த்ரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்தனர். 90களில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்தார் ரம்பா.

பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்

சுந்தர புருஷன், சிவசக்தி,அடிமைச் சங்கிலி, செங்கோட்டை, அருணாச்சலம், காதலர் தினம்,நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, காதலா காதலா, மின்சாரக் கண்ணா,பந்தா பரமசிவன், குங்குமப்பொட்டுக்கவுண்டர், என்றென்றும் காதல், சுயம்வரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

7 ஆண்டுகள் கொடி கட்டி பறந்த ரம்பாவிற்கு, அதன் பின் சினிமா வாய்ப்புகள் கடுமையாக சரிந்தன. வாய்ப்புகள் குறைந்ததால் வாழ்க்கையை தொடங்கலாம் என முடிவு செய்த ரம்யா, இந்திரக்குமார் பிரேமானந்தன் என்கிற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணத்திற்கு பின்பு 'மானாட மயிலாட' மற்றும் தெலுங்கு நடன நிகழ்ச்சி உட்பட சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்துக்கொண்டார். இதனையடுத்து தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் ரம்பா. இவருக்கு லான்யா, சாஷா, ஷிவின் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தம்முடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

ரம்பா வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார் 

ரம்பாவிற்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். குடும்பத்தோடு ரம்பா வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். கடந்த ஆண்டு தன்னுடைய இரண்டாவது மகளுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று கண்ணீரோடு ரம்பா வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்குப் பிறகு அந்த குழந்தையின் உடல்நிலை சரியாகி விட்டது என்றும் கூறியிருந்தார் . 

இன்று ரம்பா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்