தமிழ் செய்திகள்  /  Entertainment  /  80s Heroine Nirosha Birthday Today

மூன்று வயதிலே நடிப்பில் இறங்கிய நாயகி.. செந்தூரப்பூவே மறக்க முடியுமா? 80களில் கலக்கிய நாயகி நிரோஷா பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Jan 23, 2024 05:30 AM IST

HBD Nirosha : தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம். இவருக்கு ஐந்து வயதில் இருக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்டாராம் .

நிரோஷா பிறந்தநாள் இன்று
நிரோஷா பிறந்தநாள் இன்று

ட்ரெண்டிங் செய்திகள்

நிரோஷாவின் அப்பா எம்.ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடன் தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம். நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரியாராக  நிரோஷா இருந்துள்ளார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அக்னி நட்சத்திரம். இப்படத்தில் நடித்த பல கதாபாத்திரங்களுக்கு இதுவே மைல்கல்லாக அமைந்தது. வெற்றியின் உச்சத்தைத் தொட்ட இந்த திரைப்படத்தில் மாடல் பெண்ணாக அறிமுகமானவர்தான் நடிகை நிரோஷா.

அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இலங்கையில் பிறந்த இவர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர் ராதாவின் மகள். நடிகை ராதிகா சரத்குமார் தங்கை ஆவார். தனது இரண்டாவது படமான செந்தூரப்பூவே அப்படியே கிராமத்துப் பெண்ணாக மாறி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த படத்தில் நடிகர் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த ஜோடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அந்த வரவேற்பு நிஜ வாழ்க்கையிலும் உண்மையானது. நடிகர் ராம்கி திருமணம் செய்து கொண்டார் நிரோஷா.

பல படங்களில் கதாநாயகியாகச் சொல்லித்தந்த நிரோஷா. இறந்த கைகள் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் தனது உச்சக்கட்ட நடிப்பை  வெளிப்படுத்தி இருப்பார். இதைப் பார்த்த ரசிகர்கள் கண் கலங்காமல் இருக்கவே முடியாது. அந்த அளவிற்குத் தனது நடிப்பைச் சீராக மக்களிடம் கொண்டு சேர்த்து இருப்பார்.

வெள்ளித்திரை மற்றும் சின்னதிரை என அனைத்திலும் வளமும் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது திரையில் தோன்றி வருகிறார். சின்னத்திரையில் இவர் நடித்து வெளியான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடர் 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத சீரியல் ஆகும்.

தனியார் ஊடகம் ஒன்றில் கணவரும் நீங்களும் மீண்டும் ஜோடியாக நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அவர் கூறுகையில். “நிறைய பேர் கேட்கிறாங்க. நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா என்பதைக் கதைதான் முடிவு செய்யணும். தகுந்த சூழல் அமைஞ்சா, நிச்சயம் ஒண்ணா நடிப்போம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்க ஜோடியா நடிச்ச படங்களைப் பார்ப்போம். அப்போ நடந்த பழைய நிகழ்வுகளை ஷேர் பண்ணிப்போம். அந்தத் தருணங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்” என கூறி இருப்பார்.

அதேபோல ராம்கியிடம் மனதை பறிகொடுத்த நிகழ்வு குறித்தும் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதில் ”ஒருமுறை படப்பிடிப்பில், எதிர்பாராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சிக்கிக்க, கொஞ்சம் விட்டிருந்தாலும் நசுங்கியிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக் காப்பாத்தினார். பிறகு, மருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார். அப்போது தான், என் மனதை அவரிடம் பறிகொடுத்தேன்” என சொன்னார்.

திரைத் துறையில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் இந்த ஜோடியும் ஒன்று. 80ஸ் ரசிகர்கள் மத்தியில் பிரிக்க முடியாத கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது. இவர் இன்று தனது 53 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.