20 வயதில் 8 படங்களுக்கு மியூசிக்.. அசர வைக்கும் சாய் அபயங்கர்.. வாயை பிளக்கும் கோலிவுட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  20 வயதில் 8 படங்களுக்கு மியூசிக்.. அசர வைக்கும் சாய் அபயங்கர்.. வாயை பிளக்கும் கோலிவுட்!

20 வயதில் 8 படங்களுக்கு மியூசிக்.. அசர வைக்கும் சாய் அபயங்கர்.. வாயை பிளக்கும் கோலிவுட்!

HT Tamil HT Tamil Published Jul 10, 2025 04:16 PM IST
HT Tamil HT Tamil
Published Jul 10, 2025 04:16 PM IST

அண்மையில், உன்னி சிவலிங்கத்தின் இயக்கத்தில் ஷேன் நிகாம் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழில் உருவாக இருக்கும் ‘பல்டி’ படத்தில் சாய் அபயங்கர் கமிட் ஆனார். இதன் மூலம் மலையாள திரையுலகிலும் சாய் அபயங்கர் கால் பதித்து இருக்கிறார்.

20 வயதில் 8 படங்களுக்கு மியூசிக்.. அசர வைக்கும் சாய் அபயங்கர்.. வாயை பிளக்கும் கோலிவுட்!
20 வயதில் 8 படங்களுக்கு மியூசிக்.. அசர வைக்கும் சாய் அபயங்கர்.. வாயை பிளக்கும் கோலிவுட்!

8 படங்கள் கைவசம்

அதன்படி பார்க்கும் போது, தற்போது வரை சாய் அபயங்கர் கைவசம் 8 படங்கள் இருக்கின்றன. இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் எப்படி இந்த சின்னப் பையனுக்கு இத்தனை படங்கள் என்று விசாரித்தால், தற்போது சாய் அபயங்கருக்கு கிடைத்திருக்கும் புகழை தயாரிப்பாளர்கள் பணமாக மாற்ற முயற்சி செய்வதே காரணம் என்கிறார்கள்.

வரிசை கட்டும் படங்கள்

அண்மையில், உன்னி சிவலிங்கத்தின் இயக்கத்தில் ஷேன் நிகாம் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழில் உருவாக இருக்கும் ‘பல்டி’ படத்தில் சாய் அபயங்கர் கமிட் ஆனார். இதன் மூலம் மலையாள திரையுலகிலும் சாய் அபயங்கர் கால் பதித்து இருக்கிறார்.

முன்னதாக, லோகேஷ் கனகராஜ் எழுத்தில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக கமிட் ஆன அவர், தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூயூட்’, கார்த்தி நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மார்ஷல்’, சிலம்பரசனின் 49 வது திரைப்படம் உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக கமிட் ஆகி இருந்தார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

இவைத் தவிர விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம், அட்லீ - அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம் ஆகியவற்றிலும் சாய் அபயங்கர்தான் மியூசிக் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப்படங்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வில்லை.

யார் இந்த சாய் அபயங்கர்?

வலம் வரவேண்டும் என்ற பாடலை வெளியிட்டு இசைத்துறைக்கு அறிமுகமான சாய் அபயங்கர் பிரபல பாடகர்களான ஹரிணி மற்றும் திப்பு தம்பதியின் மகன் ஆவார். இந்த வருடம் சாய் அபயங்கர் இசையில் வெளியான சித்திர புத்திரி மற்றும் விழி வேகுரா உள்ளிட்ட ஆல்பங்களும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.