இளையராஜாவிடம் ஆசி வாங்கிய 6 போட்டியாளர்கள்.. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் இறுதி போட்டி! - எங்கே நடக்கிறது தெரியுமா?
கடந்த 2024-ம் ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக திவினேஷ், யோகஸ்ரீ, புவனேஷ் போன்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது

மக்களால் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா ஆசியுடன் போட்டிகளத்தில் மோத தயாராகும் 6 போட்டியாளர்கள்.. வெற்றி மகுடத்தை வெல்லப்போவது யார்?
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ZEE தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலக தமிழர்களை கவர்ந்து வரும் இசை நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரும் மே 11-ம் தேதி ஞாயிறு அன்று மாலை 4:30 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் யார் போட்டியாளர்கள்
கடந்த 2024-ம் ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக திவினேஷ், யோகஸ்ரீ, புவனேஷ் போன்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன் படி நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரும் ஞாயிறு அன்று ZEE தமிழ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.
எங்கே நடைபெறுகிறது?
இந்த இறுதிப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அவினேஷ் மற்றும் மஹதி என மொத்தம் 6 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இறுதி போட்டிக்கு தேர்வான இவர்கள் மக்களால் இசைஞானி என்றழைக்கப்படும் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி மற்றும் வாழ்த்துகளை பெற்றுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி மக்களிடம் கவனம் பெற்று வருகிறது. வெற்றி மகுடத்தை வெல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.
இவர்களில் யார் அந்த வெற்றியாளர் என்பது குறித்து அறிய ZEE தமிழின் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியை மே 11, ஞாயிறு மாலை 4:30 மணி முதல் நேரலையில் காணத்தவறாதீர்கள்.
அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், SPB சரண், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த இசை நிகழ்ச்சியின் இறுதி போட்டியை அர்ச்சனா மற்றும் ஆர்.ஜே விஜய் ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்