தருமி வேடத்தில் அசத்திய நாகேஷ்..சிவாஜி நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம்..59 ஆம் ஆண்டில் திருவிளையாடல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தருமி வேடத்தில் அசத்திய நாகேஷ்..சிவாஜி நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம்..59 ஆம் ஆண்டில் திருவிளையாடல்!

தருமி வேடத்தில் அசத்திய நாகேஷ்..சிவாஜி நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம்..59 ஆம் ஆண்டில் திருவிளையாடல்!

Divya Sekar HT Tamil
Jul 31, 2024 06:30 AM IST

59 Years of Thiruvilaiyadal : சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் திருவிளையாடல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 59 ஆண்டுகள் ஆகின்றன.

தருமி வேடத்தில் அசத்திய நாகேஷ்..சிவாஜி நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம்..59 ஆம் ஆண்டில் திருவிளையாடல்!
தருமி வேடத்தில் அசத்திய நாகேஷ்..சிவாஜி நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம்..59 ஆம் ஆண்டில் திருவிளையாடல்!

சைவ சமய பக்தி இலக்கியமான திருவிளையாடல் இலக்கியத்திலிருந்து நான்கு பகுதிகளை மட்டும் எடுத்து படமாக இயக்கினார் நாகராஜன்.சிவாஜி சாவித்ரி இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் தருமி வேடத்தில் நாகேஷ் சிறப்பாக நடித்திருப்பார்.

ஆகச் சிறந்த கலைஞன்

சிவாஜி கணேசன் ஒரு ஆகச் சிறந்த கலைஞன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகச் சிறந்த கலைஞர்களும், கதைக்களமும் ஒன்று சேர்ந்தால் அதன் வெளிப்பாடு வார்த்தைகளால் கூற முடியாது. அப்படிப்பட்ட ஆகச் சிறந்த கதையாக வெளியான திரைப்படம் தான் திருவிளையாடல் திரைப்படம். திருவிளையாடல் புராணம் என்னும் புகழ் பெற்ற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த திரைப்படம். 

திருவிளையாடல் புராணத்தில் 64 தொகுப்புகள் உள்ளன அதில் நான்கு தொகுதிகளை மட்டும் தொகுத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் தான் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம். இந்த அருமையாக நாகேஷ் நடித்திருக்கும் காட்சி இன்று வரை யாராலும் மீண்டும் நடிக்க முடியாத காட்சியாக அமைந்துள்ளது.

ஒன்றரை நாட்கள் கால்ஷீட்

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்தில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்த நாகேஷ் இந்த படத்திற்காக ஒன்றரை நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அதன்படி நாகேஷ் தனியாக வரும் காட்சிகள் அனைத்தும் ஒருநாள் படமாக்கப்பட்டது. இதில் குறுக்கும் மறுக்குமாக நடந்து ‘’ அவன் வரமாட்டான் அவன் வரமாட்டான் எனக்கு பரிசு கிடைக்காது என்று புலம்பியபடியே நடந்திருப்பார் நாகேஷ். இந்த காட்சி இன்று பார்த்தாலும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.

சிவாஜி கணேசனும், சாவித்ரி கடவுள்களான பரமசிவன் -பார்வதியை கண் முன் காட்டியிருப்பார்கள். அதேபோல நடிப்பில் பிரமாதப்படுத்தி இருப்பார். சிவாஜியும் நாகேஷ் இருவரும் பேசி நடிக்கும் காட்சி இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய காட்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத வசனம்

கே.வி மகாதேவன் இசையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றன. இந்தப் பாடல்கள் அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார். குறிப்பாக ஒரு நாள் போதுமா பாடல் இன்றும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

நக்கீரன் வேடத்தில் ஏ.பி நாகராஜ் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறுவது இன்று வரை தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத வசனமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்கியவரும் அவர் தான். சிவபெருமானாக இருந்தாலும் குற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நக்கீரனிடம் கடவுள் விளையாடும் காட்சி அற்புதமான படைப்புகளில் ஒன்று.

நான்கு தொகுதிகளாக எடுக்கப்பட்ட காரணத்தினால் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட திரைக் கலைஞர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடித்த அனைவரும் சாதாரண நடிகர்கள் கிடையாது அனைவருமே தலைசிறந்த நடிகர்கள்.

மொத்தம் பத்து பாடல்கள்

ஒவ்வொரு தொகுதிகளும் ஒவ்வொரு தனி படமாக எடுக்கக்கூடிய அளவிற்கு தங்களது சிறந்த நடிப்புத் திறமையில் அனைவரும் வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசை ஜாம்பவான் கே.வி.மகாதேவன். இந்த திரைப்படத்தில் மொத்தம் பத்து பாடல்கள். பத்து பாடல்களும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்லும் சூழ்நிலை பாடல்களாக அமைந்திருக்கும்.

பத்து பாடலையும் எழுதியவர் கண்ணதாசன். இந்த பத்து பாடல்களுமே இன்று வரை அளிக்க முடியாத வரலாற்றின் சரித்திர குறியீடாக வாழ்ந்து வருகிறது. சிவாஜி கணேசனின் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

59 ஆம் ஆண்டில் திருவிளையாடல்

1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் இது மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான சாந்தி திரையரங்கில் மட்டும் இந்த திரைப்படம் 25 வாரங்கள் ஓடியுள்ளன.

அந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் திருவிளையாடல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 59 ஆண்டுகள் ஆகின்றன. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.