கோலாகலமாக முடிந்த 54 ஆவது கேரள திரைப்பட விருதுகள்! சிறந்த நடிகர்களாக பிருத்விராஜ் ஊர்வசி தேர்வு!
2024 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படங்களுக்கான கேரள மாநில விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வான அனைத்து கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள நிஷாகாந்தி ஆடிட்டோரியத்தில் நேற்று (16/04/2025) மாலை 6 மணிக்கு 54 ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார் .இந்த விழாவிற்கு அம்மாநிலத்தின் கலாச்சார விவகார அமைச்சர் சஜி செரியன் தலைமை தாங்கினார். உடன் மற்ற கேரள அமைச்சர்களும் இருந்தனர்.
நிகழ்ச்சி
இயக்குநர் ஷாஜி என் கருணுக்கு மாநில அரசின் மிக உயர்ந்த திரைப்பட விருதான ஜே.சி. டேனியல் விருதையும் முதல்வர் வழங்கினார் . மேலும் பிரித்விராஜ் சுகுமாரன், ஊர்வசி, பிளெஸ்ஸி, விஜயராகவன், ரெசுல் பூக்குட்டி, வித்யாதரன், ஜியோ பேபி, ஜோஜு ஜார்ஜ், ரோஷன் மேத்யூ மற்றும் சங்கீத் பிரதாப் உள்ளிட்ட 48 திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஸ்டீபன் தேவஸியின் இசைக்குழுவான 'சாலிட் பேண்ட்' இசை நிகழ்ச்சி நடைபெறும்.