Vijay Sethupathi: நாளைய இயக்குநர் தந்த திருப்பம்.. கதைக்கு கால்ஷீட்.. 15 வருடங்களில் 50 படங்கள்.. விஜய் சேதுபதியின் கதை!
Vijay Sethupathi: நாளைய இயக்குநர் தந்த திருப்பம்.. கதைக்கு கால்ஷீட்.. 15 வருடங்களில் 50 படங்கள்.. விஜய் சேதுபதியின் கதை!

Vijay Sethupathi: 2010ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆன விஜய்சேதுபதி, பாலிவுட்டில் குறிப்பிடும்படியான நடிகர் வரை வளர்ந்து இருக்கிறார். இன்றுடன் தனது 47ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் விஜய் சேதுபதி குறித்து அறிந்துகொள்ள எண்ணற்ற விஷயங்கள் உள்ளன.
யார் இந்த விஜய் சேதுபதி?:
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் 1978ஆம் ஆண்டு, ஜனவரி 16ஆம் நாள் பிறந்தவர். அவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, விஜய் சேதுபதியின் குடும்பம் சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்டது. பின் தனது படிப்பை கோடம்பாக்கம் எம்.ஜி.ஆர் மேல்நிலைப் பள்ளியிலும், லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியிலும் படித்தார். படிப்பு மற்றும் விளையாட்டு என இருதுறைகளிலும் விஜய்சேதுபதி சுமாராக படிக்கும் மாணவர் என பல நேரங்களில் தன் பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.
