தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Garudan Box Office Collection: 15 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கருடன்’.. வசூல் எவ்வளவு தெரியுமா

Garudan Box Office Collection: 15 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கருடன்’.. வசூல் எவ்வளவு தெரியுமா

Marimuthu M HT Tamil
Jun 16, 2024 03:54 PM IST

Garudan Box Office Collection: 15 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் ‘கருடன்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Garudan Box Office Collection: 15 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கருடன்’.. வசூல் எவ்வளவு தெரியுமா?
Garudan Box Office Collection: 15 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கருடன்’.. வசூல் எவ்வளவு தெரியுமா?

Garudan Box Office Collection: துரை செந்தில் குமார் இயக்கத்தில், கதையின் நாயகனாக சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படம், 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயகுமார் எனப் பெரிய நடிகர் பட்டாளமே களம் இறங்கி நடித்திருக்கும் திரைப்படம், கருடன். ’’விடுதலை’’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான நகைச்சுவை நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இப்படம் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கருடன் படக் குழு:

’நெடுஞ்சாலை’ படப்புகழ் ஷிவிதா நாயர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா ஆகியோர் கதையின் நாயகிகளாக ’கருடன்’ படத்தில் நடித்து உள்ளார்கள்.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’கருடன்’ படத்தின் கதை என்ன?:

கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார், ஒரு அரசியல்வாதி. ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி, இடத்தை எப்படியாவது தன்வசமாக்க வேண்டும் என திட்டமிடுகிறார், அரசியல்வாதியாக நடிக்கும் ஆர். வி. உதயகுமார். அதே ஊரில் இரு நண்பர்கள் இணைபிரியா நட்புடன் இருக்கிறார்கள்.

அந்த இரு நண்பர்களில் ஒருவர் சசி குமார், மற்றொருவர் உன்னி முகுந்தன். உன்னியின் நிழலாக, அவருக்கு விஸ்வாசமாக இருப்பவர் தான், சொக்கன். அந்த சொக்கன் தான், சூரி. பத்திரத்தை கைப்பற்ற அரசியல்வாதியாக ஆர். வி. உதயகுமார் என்னென்ன செய்கிறார். என்ன மாதிரி திட்டமிடுகிறார், அதற்காக என்ன மாதிரியாக சம்பவங்கள் நடக்கின்றன என்பது தான் படத்தின் முழுக் கதை.

சூரியின் கச்சிதமாக நடிப்பு:

சூரியின் சொக்கன் கதாபாத்திரம், அதன் பரிணாமங்கள் அனைத்தும் கச்சிதமாக வெளிப்படும் அளவுக்கு அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலைக்குப் பிறகு, ஹீரோவாக தனது வாழ்க்கையை மீண்டும் இப்படத்தில் கட்டியெழுப்பிட்டார், சூரி.

கருடன் வசூல்:

இந்நிலையில் ’கருடன்’ படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ’கருடன்’ படம் வெளியாகி 15 நாட்களைக் கடந்த நிலையில், 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான வரவேற்பால் வார இறுதியில் ’கருடன்’ படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் கருடன் திரைப்படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை, ஓடிடி உரிமை இன்னும் விற்பனை ஆகவில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் லால் சலாம் இறுதி வசூலை ’கருடன்’ முறியடித்துள்ளது. ரஜினியின் லால் சலாம் ரூ. 17.46 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.