Vaadivaasal: வாயை விட்ட ஞானவேல்; பொங்கிய அமீர்.. ஒதுங்கி நின்ற சூர்யா.. சமாளித்து சாதித்த தாணு.. கைபிடித்த வெற்றிமாறன்
வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா வெற்றிமாறன் கூட்டணி இணைய இருப்பதாக கலைப்புலி தாணு அறிவித்திருக்கிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது.சிசு செல்லப்பா வாடிவாசல் எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி உருவாக இருக்கும் இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் படத்திற்கான டெஸ்ட் ஷூட்டும் நடந்தது.
விடுதலை -ல் பிசியான வெற்றிமாறன்
ஆனால், அதன் பிறகு வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிசியானதால், சூர்யா கங்குவா படத்தில் கமிட் ஆனார்.இதனால் வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்தான கேள்வி எழுந்தது. விடுதலை திரைப்படம் இழுத்தடிக்கப்பட்டு சென்று கொண்டே இருக்க, சூர்யாவும் அடுத்தப்படங்களில் கமிட் ஆனார். இந்த நிலையில் இயக்குநர் அமீரும் அந்தப்படத்தில் கமிட் ஆனார்.
இதற்கிடையேதான், கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கார்த்தியை வாழ்த்துவதற்கு அவரது திரையுலகில் முக்கியப்பங்காற்றிய இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கார்த்தியை அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் அழைக்கப்படவில்லை.
அமீரால் உருவான பிரச்சினை
இந்த நிலையில் அவர் நடித்த படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அமீர் தன்னை நிகழ்விற்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் அவர் கொடுத்த நேர்காணல்களில் இந்தப்பிரச்சினை தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட போது, சூர்யா பற்றியும் பருத்திவீரன் திரைப்படத்தில் தனக்கும் ஞானவேலுக்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்தும் ஓப்பனாக பேசியிருந்தார். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், இந்தப்பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்தில் இருந்து அமீர் நீக்கப்பட்டால்தான் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியது; ஆனால் வெற்றிமாறன் நிச்சயமாக அமீர் படத்தில் இருப்பார் என்பதை போட்டோ வெளியிட்டு உறுதிபடுத்தினார். இந்த சலசலப்பு வாடிவாசல் திரைப்படம் நடக்குமா? நடக்காதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.
அதன் பின்னர் நேர்காணல் கொடுத்த கலைப்புலி தாணு வாடிவாசல் திரைப்படம் நிச்சயமாக வரும் என்றும் உறுதிப்பட கூறினார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வெற்றிமாறனும், சூர்யாவையும் சந்தித்த புகைப்படத்தை கலைப்புலி தாணு வெளியிட்டு வாடிவாசல் திரைப்படம் தொடங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்