5 பேரை காவு வாங்கியும் விடாத விஷால்.. ஒருவழியா வெற்றி தான்.. நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.. நெகிழ்ச்சி பதிவு!
மதகஜராஜா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த 5 நடிகர்கள் தற்போது இல்லை. இந்த 12 வருடத்திற்குள் அவர்கள் இறந்து விட்டனர்.
பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் விஷாலின் மதகஜராஜா படமும் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி மற்றும் விஷால் இணைந்த முதல் படம் இந்த மதகஜராஜா தான், ஆனால் இவர்கள் இணைந்து 2015 ஆம் ஆண்டு ஆம்பள மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆக்சன் ஆகிய படங்களை கொடுத்துள்ளனர். காமெடி படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் சுந்தர் சி பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு இவரது படங்கள் அனைத்தும் காமெடி கதைக்களத்தில் இருக்கும்.
இதற்கு முன்பு விஷால் மற்றும் சுந்தர் சி இணைந்து கொடுத்த ஆம்பள திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றிருந்தது. ஆனால் ஆக்சன் திரைப்படம் சரியாக செல்லவில்லை. பல காரணங்களால் ஆண்டு கணக்காக தள்ளிப் போன மதகஜராஜா திரைப்படம் சற்று வெளியாக உள்ளது. இதன் கதையும் காமெடி கலந்து தான் இருந்தது. இதன் டிரெய்லரும் அதையே காட்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக விஷாலிற்கு எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி சிறிதளவு ஆறுதலை தந்திருந்தாலும் இந்த படம் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வாய்ப்புள்ளது.
ரிலீஸ் ஆகாமல் இருந்தது
கடந்த 2013-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. படம் சுந்தர் சி படம் என்பதாலும், படத்தில் விஷால், சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் காரணத்தால் நிச்சயமாக காமெடிக்கு பஞ்சமே இருக்காது என படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்புகள் இருந்தது.
சுமார் 12 வருடங்கள் கழித்து இந்த பொங்கலுக்கு தனது ரிலீஸை அறிவித்துள்ளது மதகஜராஜா. பொங்கலுக்கு 11 புதிய படங்கள் வெளியாகும் நிலையில் மதகஜராஜாவுக்கு இப்போதே சமூக வலைதளங்களில் ஆதரவு குவியத் தொடங்கிவிட்டன. அந்த சமயத்தில் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு உள்ளிட்ட எல்லா படங்களும் நகைச்சுவை சிறப்பாக இருந்தது. எனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அது மட்டுமின்றி படத்தில் இருந்து வெளியான பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிக்கு புக்கு ரயில் வண்டி பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் மை டியர் லவ்வரு என்ற பாடலை விஷயலே பாடியுள்ளார். இப்பாடல் 2012 ஆம் காலக்கட்டத்தில் மிகவும் விரும்பப்பட்டது. தற்போது இப்பாடல் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.
நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சமிருக்காது
இந்த சூழலில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஷால் "12 ஆண்டுகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு எனது திரைப்பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த குடும்ப எண்டெர்டெயின்மெண்ட் படமான மதகஜராஜா பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதுவும் எனக்கு பிடித்த சுந்தர்.சி. சந்தானம் கூட்டணியில் உருவான படம். நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சமிருக்காது" என தெரிவித்துள்ளார்.
5 பேரை காவு வாங்கிய மதகஜராஜா
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த 5 நடிகர்கள் தற்போது இல்லை. இந்த 12 வருடத்திற்குள் அவர்கள் இறந்து விட்டனர். மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு, சீனு மோகன் ஆகிய 5 நடிகர்களும் தற்போது உயிரோடு இல்லை. விஷாலுக்கு ஜோடியாக நடித்த முன்னாள் காதலி வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் அவர் ஆண் நண்பருடன் திருமணம் நடைப்பெற்றது. 11 படங்களுடன் இந்த படமும் ரேஸில் உள்ளனர். வருஷம் தாண்டியதால் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்