அசால்ட்டாக 500 கோடியைத் தாண்டிய புஷ்பா 2! புஷ்பானா பயர்! வைல்டு பயர்! தியேட்டர்களை தெறிக்க விடும்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அசால்ட்டாக 500 கோடியைத் தாண்டிய புஷ்பா 2! புஷ்பானா பயர்! வைல்டு பயர்! தியேட்டர்களை தெறிக்க விடும்!

அசால்ட்டாக 500 கோடியைத் தாண்டிய புஷ்பா 2! புஷ்பானா பயர்! வைல்டு பயர்! தியேட்டர்களை தெறிக்க விடும்!

Suguna Devi P HT Tamil
Dec 09, 2024 07:04 AM IST

உலகெங்கும் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான புஷ்பா 2 படத்தின் 4 நாள் வரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

அசால்ட்டாக 500 கோடியைத் தாண்டிய புஷ்பா 2! புஷ்பானா பயர்! வைல்டு பயர்! தியேட்டர்களை தெறிக்க விடும்!
அசால்ட்டாக 500 கோடியைத் தாண்டிய புஷ்பா 2! புஷ்பானா பயர்! வைல்டு பயர்! தியேட்டர்களை தெறிக்க விடும்!

அசால்ட்டா 500 கோடியைத் தாண்டிய புஷ்பா 2

பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 4வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 381.95 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 4வது நாளான நேற்று சுமார் ரூ.527 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

படத்தின் வசூல் முதல் நாளைக் காட்டிலும் 2ம் நாள் சற்று குறைந்து காணப்பட்டாலும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் அதிகப்படியான வசூலை எட்டியுள்ளது. இருப்பினும், வரும் நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புஷ்பா 2 படத்தின் கதை என்ன?

புஷ்ப ராஜ் (அல்லு அர்ஜுன்) சிவப்பு சந்தன சிண்டிகேட் சாம்ராஜ்யத்தின் மறுக்க முடியாத தலைவராக மாறுகிறார். தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கிறார். எஸ்.பி. பன்வர் சிங் ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்) ஒவ்வொரு முறையும் புஷ்பாவின் சிவப்பு சந்தன மரத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுக்க முயற்சிக்கிறார்.

ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா மந்தனா) புஷ்பா முதலமைச்சருடன் ஒரு புகைப்படம் எடுப்பதைப் பார்க்க விரும்புகிறார். ஆனால் முதலமைச்சர் புஷ்பா ராஜை ஒரு கடத்தல்காரர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க மறுக்கிறார். முதலமைச்சரை நீக்கிவிட்டு சித்தப்பாவை (ராவ் ரமேஷ்) அந்த பதவியில் அமர வைக்க புஷ்பா முடிவு செய்கிறார்.

அதே வேளயைில் வெளிநாடு செல்லும் சிவப்பு சந்தன கட்டைகளை, பன்வர் சிங் ஷெகாவத் பிடிக்க முயற்சிக்கிறார். அது நடந்தால், புஷ்பாவின் சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து. இந்த இரு பிரச்னைகளை எப்படி சமாளித்தார் புஷ்பராஜ்? அதன் பிறகு என்ன நடந்தது?

இந்த சவாலில் புஷ்பா வெற்றி பெற்றாரா? புஷ்பாவின் பேரத்தை தடுக்க பன்வர் சிங் ஷெகாவத் என்ன செய்தார்? புஷ்பா அவரை எப்படி வீழ்த்தினார்? புஷ்பாவின் கனவு எப்படி நனவாகியது? தனது மூத்த சகோதரரின் மகளை காப்பாற்ற மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டியுடன் (ஜெகபதி பாபு) புஷ்பா ஏன் சண்டையிட்டார்? இதுதான் புஷ்பா 2 படத்தின் கதை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.