43 Years of Mouna Geethangal: 'அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பால..' உரக்கச் சொன்ன மௌன கீதங்கள்!
படம் இறுதி பகுதியை தொடும் போது படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பரபரப்பை கூட்டுவார். தனது மனைவியோடு வேலை செய்யும் சக ஊழியர் சுகுணாவின் மீது மிகுந்த மோசமான களங்கத்தை உருவாக்கும் போது மிகவும் ஆணித்தரமான வசனங்கள் வைத்து பெண்மையை உயர்த்தி பேசி தாய்மார்களின் ஒட்டுமொத்த அப்ளாஸ் அள்ளுவார்.
தமிழ் திரைப்பட உலகில் திரைக்கதை சக்ரவர்த்தி பாக்யராஜ் தனது மூன்றாவது படமான மௌன கீதங்கள் என்ற படத்தின் மூலம் அழுத்தமான முத்திரை பதித்தார். நம்மை சுற்றி உள்ள ஒரு தினுசான கதையை கையில் எடுத்து கொண்டு சுவாரஸ்யமாக.. நாசூக்காக கதை சொல்வதில் கெட்டிக்காரர். எடக்கு மடக்கான ஏடாகூடமான கதைக்களத்தை கையில் எடுத்தாலும் தனது கதை சொல்லும் பாணியில் நகைச்சுவையாக படம் பார்ப்போருக்கு விரசமில்லாமல் யதார்த்தம் மீறாமல் காட்சிகளை வைத்து தாய்குலத்தின் ஆதரவை அள்ளிக்கொண்ட புத்திசாலி இயக்குநர். தனது அப்பாவித்தனமான தோற்றத்தையும் கீச்சு குரலையும் கதைகளின் மூலம் பாசிட்டிவ் ஆக மாற்றி கொண்டவர். மொத்தத்தில் எல்லோருக்கும் பிடித்துப்போன ஹீரோ மற்றும் இயக்குநர் ஆக சிறப்பான கதைகள் மூலம் தமிழ் ரசிகர்களை பித்து பிடிக்க வைத்தவர்.
பல திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேலும் ஓடி கல்லா கட்டிய அமளி துமளியாக வெற்றி பெற்ற இந்த மௌனகீதங்கள் 1981 ஜனவரி 23 திரைக்கு வந்தது. 43 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்தாலும் கூட ஃபிரஷ் பீல் தரும் எவர்கிரீன் மூவி.
கதையில் நாயகன் ரகுநாதனாக பாக்யராஜ், நாயகி சுகுணாவாக சரிதா இவர்களோடு மாஸ்டர் சுரேஷ், செந்தில், ஊர்மிளா, கல்லாபெட்டி சிங்காரம் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஐந்து வருட காலமாக பிரிந்து வாழும் கணவன் மகனுடன் வாழும் மனைவி மீண்டும் இணைந்தார்களா என்ற கருவை வைத்துக்கொண்டு மனிதன் தனது திரைக்கதையில் பல கிளைக்கதைகளை திரைக்கதையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் வரிசைகட்டி கொண்டு வருவதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படும். தனது மனைவி யாக வருபவளோடு அறிமுக காட்சியே அமர்க்களபடுத்தும். காதலுக்கு பின் திருமணம் செய்த பின்னர் நடக்கும் செல்ல ஊடல்கள் எல்லா வீடுகளில் நடக்கும் சம்பவங்களை நினைவு படுத்த வைக்கும். தனது மனைவி யின் விதவை தோழிக்கு அலுவலகத்தில் சில உதவிகள் செய்ய கேட்க அந்த தோழியுடன் கணவர் சந்தர்ப்ப சூழலில் உறவாகிறார். அந்த நிகழ்வையும் தனது மனைவியிடம் சொல்ல பிரச்சினை ஆரம்பித்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் சூழலில் காலமாற்றங்களால் ஏற்படும் சூழல்களும் மீண்டும் புரிதலோடு இணைகிறது குடும்பம்.
படம் இறுதி பகுதியை தொடும் போது படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பரபரப்பை கூட்டுவார். தனது மனைவியோடு வேலை செய்யும் சக ஊழியர் சுகுணாவின் மீது மிகுந்த மோசமான களங்கத்தை உருவாக்கும் போது மிகவும் ஆணித்தரமான வசனங்கள் வைத்து பெண்மையை உயர்த்தி பேசி தாய்மார்களின் ஒட்டுமொத்த அப்ளாஸ் அள்ளுவார். இறுதி கிளைமாக்ஸ் காட்சியில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கும் போது சரிதா உடைந்து போய் தனது மௌனத்தை உரத்த குரலில் உடைக்கும் போது ஹீரோ அமைதியாக மௌனம் காக்கும் போது திரையரங்குகளில் மௌனம் நிலவும் அதிசயத்தை நிகழ்த்துவது பாக்யராஜால் மட்டுமே சாத்தியம்.
அதுபோல எப்போதும் பிசியாக உள்ள நடிகர்களை தேடிப் போகாமல் கதைக்கு பொருத்தமான நடிகர்களை நடிக்க வைப்பார். எப்போதும் தனது திரைக்கதையை மட்டுமே பலமாக நம்புபவர். எல்லோரும் இளையராஜா இசை தேடிப்போன காலத்தில் தனது முதல்படத்துக்கு இசை அமைத்த கங்கை அமரனை இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஆக்கினார். அவர் அமைத்த இசையில் "மூக்குத்தி பூ மேலே காத்து உட்கார்ந்து பேசுதய்யா" "டாடி டாடி ஓ மை டாடி" "மாசமோ மார்கழி மாசம் " ஆகிய பாடல்களில் ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்