Divya Kalachi: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு.. திவ்யா கள்ளச்சி, கார்த்தி உட்பட 4 பேர் கைது! - காரணம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Divya Kalachi: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு.. திவ்யா கள்ளச்சி, கார்த்தி உட்பட 4 பேர் கைது! - காரணம் என்ன?

Divya Kalachi: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு.. திவ்யா கள்ளச்சி, கார்த்தி உட்பட 4 பேர் கைது! - காரணம் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 29, 2025 07:14 PM IST

Divya Kalachi: சோசியல் மீடியாவில் பிரபலமான திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

Divya Kalachi: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு.. திவ்யா கள்ளச்சி, கார்த்தி உட்பட 4 பேர் கைது! - காரணம் என்ன?
Divya Kalachi: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு.. திவ்யா கள்ளச்சி, கார்த்தி உட்பட 4 பேர் கைது! - காரணம் என்ன?

அந்தப்பேட்டிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவரது வீடியோக்கள் பலரால் கிண்டல் செய்யப்பட்டாலும், அதனையும் பாசிட்டிவ்வாகக் கொண்டு அடுத்தடுத்த வீடியோ போட்டு பிரபலமாகி அதிக பணம் சம்பாதித்தாக கூறப்படுகிறது.

திவ்யா கள்ளச்சி மீது புகார்

அண்மையில் திவ்யா கள்ளச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்து வைத்துக்கொண்டு அதனை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என திவ்யா கள்ளச்சி மிரட்டியதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப்புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறை திவ்யா கள்ளச்சி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கார்த்திக், ஆனந்த், சித்ரா உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

அண்மையில், சமூக ஆர்வலரான சித்ரா என்பவர் சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘சமூக சீர்கேட்டிற்கு எதிரா நான் குரல் கொடுத்து வரேன். அதற்காக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திட்டு வர்றேன். அந்த சேனல் மூலமா வந்த வருமானம் 2 லட்சத்துக்கும் மேல திடீர்ன்னு காணாம போச்சு. அத யாரோ ஹேக் பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சு அத கண்டுபிடிக்க பாத்தோம். அப்போ, அந்த காசு எல்லாம் திவ்யா கள்ளச்சிங்குற ஐடிக்கு போயிருந்தது தெரிஞ்சது.

என்ன பண்ண முடியுமோ பண்ணு

அதுக்கப்புறம் அந்த லேடிய நேர்ல போய் பாக்கலாம்ன்னு போனப்போ, அவங்க நிறைய சமூக சீர்கேடான விஷயங்கள சோசியல் மீடியாவுல பதிவு பண்ணிட்டு வர்றது தெரிஞ்சது. இதபத்தி பேச போனப்போ கார்த்திக்ன்னு ஒரு யூடியூபரும் அங்க தான் இருந்தாரு. அப்போ, நான் கேட்ட கேள்விக்கெல்லாம் திமிரா பதில் சொல்லி அப்படி தான் பண்ணுவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணுன்னு சொன்னாங்க.

குழந்தைங்கள வச்சு செக்ஸ் தொழில்

இதனால நான் அங்க இருந்து போகலாம்ன்னு முடிவு பண்ணும் போது, அங்க இருந்த குழந்தைங்க கொஞ்ச பேரு வந்து பாத்தாங்க. அவங்க எங்கள அடைச்சு வச்சு கொடும படுத்துறாங்க. பாலியல் தொந்தரவு தராங்க. சேலம் மணின்னு ஒரு யூடியூபர கொலை செய்ய சொல்லி மிரட்டுறாங்க. எங்கள பெரிய பெரிய பணக்காரங்கள்கிட்ட அனுப்பி தப்பான வேலை செய்யுறாங்க.

அதுமட்டுமில்லாம எங்கள வச்சி வீடியோ எடுத்து மிரட்டி காசு வாங்குறாங்க. திவ்யா கள்ளச்சியும், ரவுடி பேபி சூர்யாவும் செக்ஸ் சாட் குரூப் வச்சிருக்காங்க. அதுல எங்க போட்டோ போட்டு சம்பாதிக்குறாங்கன்னு புலம்புனாங்க.

திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா உடந்தை

அதுக்கு அப்புறம் மறுபடியும் போய், திவ்யா கள்ளச்சிகிட்ட சண்ட போட்டு போன வாங்கி பாத்தா, எக்கச்சக்க குழந்தைங்களோட ஆபாச வீடியோவ போன்ல வச்சிருக்கா. திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, செல்வராணி போன்ற யூடியூபர்ஸ் செக்ஸ் வீடியோவும் உதயா சுமதி, பிங்கி பாய்ங்குற யூடியூபர் கிட்ட ரேட் பேசுனா ஆடியோவும் வச்சிருக்கா.

திவ்யா கள்ளச்சி, சின்ன சின்ன பசங்கள கொடூரமாக அடிச்சி சித்ரவதை செஞ்சு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து அத ரசிச்சிருக்கா. இத பாத்து விருதுநகர் எஸ்பி ஆபிஸ்ல போய் பாதிக்கப்பட்டவர்கள வச்சி கம்ளையன்ட் கொடுத்தோம். இப்போ வழக்கும் போயிருக்கு.

கொலை மிரட்டல்

இதுனால, தீபாங்குற லேடி எனக்கு கொலை மிரட்டல் விடுக்குறாங்க. ரவுடி பேபி சூர்யாவும், சிக்கந்தரும் என்ன ரொம்பவே மிரட்டுறாங்க. அதோட இந்த வீடியோ எல்லாம் மார்பிங்ன்னு சொல்ல சொல்லி மிரட்டுறாங்க. இதெல்லாம் ஒரு தனிப்பட்ட நபரால செய்ய முடியுமா?

இப்போ கேஸ் நடக்குதுன்னு தெரிஞ்சு திவ்யா கள்ளச்சி தலைமறைவாகிட்டா. இவ வாய தொறந்தா பலபேர் மாட்டுவாங்க. இதுனால போலீஸ் அவள சீக்கிரம் அரெஸ்ட் பண்ணி வாக்குமூலம் வாங்கனும்" என்றார்.

இந்த நிலையில், இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில்தான் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.