தமிழ் செய்திகள்  /  Entertainment  /  38 Years Of Uyire Unakkaga Mohan Nadia Starrer Super Hit Movie Uyire Unakkaga

38 Years of Uyire Unakkaga: மோகன் நதியா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் உயிரே உனக்காக

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 07, 2024 06:00 AM IST

"பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க... பொன்வானம் சிவந்த வானம் எங்கும் மிதக்க" பாடல் கேட்க கேட்க ஆனந்தம். அந்த காலதத்தில் இந்த படத்தின் பாடல் கேசட்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவிற்கு பாடல்கள் ஹிட்.

உயிரே உனக்காக
உயிரே உனக்காக

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 1986 மார்ச் மாதம் இன்றைய ஏழாம் தேதி வெளிவந்த படம். வெளிவந்து 38 ஆண்டுகள் கழித்தும் கூட இந்த படம் சிலாகித்து பேசும் அளவுக்கு அன்றைய ரசிகர்கள் கொண்டாடிய படம். பல வெற்றி பெற்ற படங்களை தந்த கே.ரங்கராஜன் தான் இந்த படத்தின் இயக்குநர். மோகன் கதைநாயகன் பாலுவாகவும் நதியா உமாவாகவும், சுஜாதா அபிராமியாகவும் இவர்களோடு விஜயகுமார் கோபாலகிருஷ்ணன், மீசை முருகேசன், செந்தில், சார்லி, தியாகு, சின்னிஜெயந்த், கோவை சரளா, சங்கீதா பேபிமீனா, பிரியதர்ஷனி ஆகியோர் நடித்துள்ளனர்.

மிகவும் வசதியான ராஜவம்சத்தை சேர்ந்த விஜயகுமாரின் ஓரே மகள் நதியாஆவார். இவர் வெளியூரில் தங்கி கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் போது விஜயகுமார் சங்கீதாவை திருமணம் செய்து கொள்கிறார். படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பும் மகள் நதியாவுக்கு தந்தை இரண்டாவது திருமணம் செய்ததை கண்டு அதிர்ச்சியும் கோபமும் ஆகிறார்.

தொடர்ந்து சித்தி, தந்தை மீதான கோபம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் வெறுப்பாகி வீட்டை விட்டு வெளியேறி கண்ணியாகுமரி சென்று விடுகிறார். மகள் கோபத்துடன் வெளியே சென்றது ஊருக்கு தெரிந்தால் அவமானமாக போய்விடும் என்று கருதி புகார் தெரிவிக்காமல் மகளைத் தேடி தனது ஆட்களை அனுப்பி வைக்கிறார். நாயகி குமரி சென்றதும் கதை வேறு ரூட்டில் பயணிக்கிறது. குமரியில் சுஜாதா தனது அண்ணன் மீசை முருகேசன் மற்றும் மகன்பாலுவுடனும் இரண்டு மகள்கள் உடன் இருந்து வருகிறார். சுஜாதாவின் இன்னும் ஒரு சகோதரர் கோபாலகிருஷ்ணன் மகள் உமாவை குமரிக்கு அனுப்பி வைக்கிறார். உமாவை முன்பின் பார்த்தறியாத சுஜாதாவின் மகன் பாலு அழைத்து வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார். 

அந்த இடத்தில் ஊரைவிட்டு வெளியேறி வந்து தனியாக நிற்கும் நதியாவை உமா என்று நினைத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். வந்த வீட்டில் எல்லோரும் நதியாவை உமா என்று நினைப்பதை சாதகமாக்கி உமா தான் தான் என்று மாறி விடுகிறார். மாமா மகள் உமா என்பதால் பாலுவும் காதலித்து வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து சகோதரர் டெல்லியில் இருந்து தனது மகளின் திருமணம் குறித்து பேச குமரி வருகிற போது நதியாவின் விசயம் எல்லோருக்கும் தெரிகிறது. 

இதற்கு மேல் இங்கே இருப்பது சரியில்லை என்று வெளியேற முற்படும் போது சுஜாதா அவர்கள் தங்கள் வீட்டில் தொடர்ந்து தங்க அனுமதி தருகிறார். இதன் பின்னர் தந்தை மகளை கண்டு பிடித்தாரா... இருவருக்கும் இடையே இருக்கும் காதல் என்ன ஆனது என்று பல திருப்பங்களுடன் கதை நகரும். சுவாரஸ்யமான கதையோட்டத்தில் பாடல்கள் அனைத்தும் உயிரோட்டமாய் அமைந்தது படத்தின் பலம். படத்தில் இசை லட்சுமிகாந்த் பியாரிலால்...

"பன்னீரில் நனைந்த"

"ஓடோடி விளையாடு"

"பல்லவி இல்லாமல்"

"ஐ வாண்ட் டு பீ எ பிக்மேன்"

"கவிதைகள் விரியும்"

"கையாலே உன்னை" என்ற பாடல்களும் வித்தியாசப்பட்ட இசையும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது. இந்த இசை அமைப்பாளர்கள் இருவரும் பாலிவுட் காரர்கள். இளையராஜா இசையில் பாடல்கள் ஒலிக்கும் காலத்தின் போது இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தந்தது. "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க... பொன்வானம் சிவந்த வானம் எங்கும் மிதக்க" பாடல் கேட்க கேட்க ஆனந்தம். அந்த காலதத்தில் இந்த படத்தின் பாடல் கேசட்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவிற்கு பாடல்கள் ஹிட். அத்தனை வீடுகளிலும் தேநீர் விடுதிகளிலும் பேருந்துகளிலும் திரும்ப திரும்ப கேட்ட இந்த படத்தின் பாடல்களை இன்று கேட்கும் போதும் வித்தியாசமான அனுபவம்தான்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்