தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  36 Years Of Agni Natchathiram : அனைத்து பாடல்களும் ஹிட்! மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்! அக்னி நட்சத்திரம்!

36 Years of Agni natchathiram : அனைத்து பாடல்களும் ஹிட்! மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்! அக்னி நட்சத்திரம்!

Priyadarshini R HT Tamil
Apr 15, 2024 05:30 AM IST

36 Years of Agni Natchathiram : 1988ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இந்தப்படம் வெளியானது. மவுனராகம் படம் கொடுத்த பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இந்தப்படத்தை இயக்கியிருப்பார்.

36 Years of Agni natchathiram : அனைத்து பாடல்களும் ஹிட்! மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்! அக்னி நட்சத்திரம்!
36 Years of Agni natchathiram : அனைத்து பாடல்களும் ஹிட்! மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்! அக்னி நட்சத்திரம்!

ட்ரெண்டிங் செய்திகள்

பயிற்சியின்போது, அவர் கமிஷ்னரின் மகள் அஞ்சலியை சந்திப்பார். அவர்கள் காதலிக்கத் துவங்குவார்கள். பயிற்சி முடிந்து துணை கமிஷ்னராக கவுதம் பதவியேற்பார். இந்நிலையில் அசோக் ஒரு பெண்ணை சந்தித்து அவரிடம் காதல் வயப்படுவார். இதற்கிடையில் விஸ்வநாதன் ஒரு ஃபேக்டிரி முதலாளி சிதம்பரத்தின் நிறுவனத்தின் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.

ஒரு நாள் இரவு அசோக் மற்றும் அவரது நண்பர்கள், கவுதம் மற்றும் அஞ்சலியை வம்பிழுப்பார்கள். அசோக்கின் நண்பரை கைது செய்ததற்காக இவ்வாறு செய்வார்கள். அசோக் மற்றும் அவரின் மற்ற நண்பர்கள் கவுதம் வீட்டை கற்களைக் கொண்டு தாக்குவார்கள். இதனால் சுசீலா காயமடைந்துவிடுவார்.

ஆத்திரமடைந்த கவுதம் அசோக்கை கைது செய்வார். அப்போது விஸ்வநாதன் ஊரில் இருக்கமாட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை நீளு. இந்நிலையில், சுசீலா, அசோக்கை ஜாமீனில் எடுக்க கமலாவுக்கு உதவுவார். இந்நிலையில் தனது ஃபேக்ட்ரி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க விஸ்வநாதனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்வார்.

அசோக்கின் தங்கையை பெண் பார்க்க வரும்போது, விஸ்வநாதன் அந்த நிகழ்வுக்கு வந்திருக்கமாட்டார். இதனால் மாப்பிள்ளை வீட்டார், விஸ்வநாதன் – கமலா திருமணம் குறித்த சந்தேகத்தை எழுப்புவார்கள். இதனால் ஆத்திரமடைந்த அசோக், விஸ்வநாதன் வீட்டிற்கு சென்று சத்தம் போடுவார்.

ஆனால், அப்போதுதான் தெரியவரும், விஸ்வநாதன் தனது தாயை இழந்திருப்பார் என்று, கவுதம், அசோக்கை வெளியேற்றிவிடுவார். அசோக்குக்கு அப்போதுதான் தெரியவரும் தனது காதலியின் குடும்பமும் சர்ச்சைகள் நிறைந்தது என்று, இந்நிலையில், கவுதம் – அஞ்சலியின் காதல் விவகாரத்தை அறிந்த கமிஷ்னருக்கு விஸ்வநாதனின் நடத்தை காரணமாக சந்தேகம் எழும்.

இந்நிலையில் ஒரு நாள் ரயிலில் பயணம் செய்யும் அசோக்கின் தங்கையை தாக்க வரும் சிதம்பரத்தின் ரவுடிகளிடம் இருந்து அவரை கவுதமும், அஞ்சலியும்தான் காப்பாத்துவார்கள். அவரை வீட்டில் விடும்போது அசோக் மற்றும் கவுதம் இடையே மோதல் ஏற்படும்.

இந்நிலையில் சிதம்பரத்தின் ஆட்கள், விஸ்வநாதனை கொல்ல முயற்சி செய்வார். இதனால் இரு குடும்பத்தினரும் நெருங்கிவிடுவார்கள். அதன் பின்னும் சகோதர யுத்தம் தொடருமா அல்லது சகோதரர்கள் சேர்வார்களா என்பதுதான் கிளைமேக்ஸ்.

அடித்துக்கொள்ளும் சகோதரர்களாக பிரபுவும், கார்த்திக்கும் நடித்திருப்பார்கள். இருவரும் மோதிக்கொள்ளும் சகோதரர்களாகவும், அன்பான காதலர்களாகவும் நடிப்பில் அசத்தியிருப்பார்கள்.

விஜயகுமார், அமலா, நிரோஷா, சுமித்ரா, ஜெயசித்ரா, வி.கே. ராமசாமி உள்ளட்ட பலர் நடித்திருப்பார்கள். இரண்டு மனைவிகளுக்கு இடையேயான கதை என்பதால், இந்தப்படத்தில் இரு குடும்பத்தினருக்கும் சமூகத்தில் இருக்கும் நெருக்கடியை விளக்கும் படமாக இருக்கும்.

எனினும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக சார்ந்த பிரச்னைகளை அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை படம் சித்தரித்திருக்கும் விதம் அழகாக இருக்கும்.

1988ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இந்தப்படம் வெளியானது. மவுனராகம் படம் கொடுத்த பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இந்தப்படத்தை இயக்கியிருப்பார். மணிரத்னத்தின் வழக்கமான இருள் சூழ்ந்த சினிமோட்டோகிராஃபியில் படம் அட்டகாசமாக இருக்கும். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். லெனின் மற்றும் வி.டி.விஜயன் எடிட் செய்திருப்பார்கள்.

இளையராஜாவின் இசையில், வாவா அன்பே அன்பே, நின்னுக்கோரி வர்ணம், தூங்காத விழிகள் ரெண்டு, ஒரு பூங்காவனம், ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இன்றுவரை ரசிக்கப்படுபவை. படம் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்