உங்க காசும் வேணாம்.. கல்யாணமும் வேணாம்.. குகைக்குள் குடும்பம் நடத்த விபரீத முடிவெடுத்த இளைஞர்!
சீனாவின் சிச்சுவானைச் சேர்ந்த 35 வயதான மின் ஹெங்காய் என்ற நபர், வேலையும் திருமணமும் பயனற்றவை என்று நம்பி, குகையில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

35 வயதான சீன நபர் ஒருவர் வேலையும் திருமணமும் அர்த்தமற்றவை என்று முடிவு செய்து, ஒரு குகையில் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை நம்ப முடிகிறதா?. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த மின் ஹெங்காய், வேலையும் திருமணமும் தேவையற்றதாக உணர்ந்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு குகையில் வசித்து வருவதாகவும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
10 மணி நேரம் வேலை செய்தும் கடன் தீரவில்லை
மின் 2021 ஆம் ஆண்டு வரை ஒரு ரைடு-ஹெய்லிங் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றினார். மாதத்திற்கு 10,000 யுவான் (1,400 டாலர்) சம்பாதித்தார். இருப்பினும், அவரால் அவருடைய கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதற்காக தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக அயராது உழைத்துள்ளார். இப்படியே நாட்கள் சென்றதால், அவர் தனது வேலையை அர்த்தமற்றதாகக் காணத் தொடங்கினார்.