32 Years of Mannan : மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட மன்னன் திரைப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளா?
32 Years of Mannan : மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட மன்னன் திரைப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளா?
மன்னன், தமிழ் மசாலா திரைப்படம், இந்தப்படத்தை இயக்கியவர் பி.வாசு. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தி மற்றும் குஷ்பூ ஆகியோர் நடித்திருப்பார்கள். அனுராகா அரளித்து படத்தின் ரீமேக்தான் மன்னன் திரைப்படம்.
இந்தப்படம், ராதாதேவி என்பவர் எழுதிய அனுராகடா அந்தப்புரா என்ற நாவலின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தப்படம் திரையரங்குகளில் 1992ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வெளியானது. திரையரங்கில் 25 வாரங்கள் ஓடியது.
சாந்தி தேவி, தேவி இன்டஸ்ட்ரீஸின் சிஇஓ. இந்தியாவிலே நம்பர் 1 இளம் தொழிலதிபர். சென்னையில் வசிப்பவர். மிகவும் திமிர் பிடித்தவர். இவரது தந்தை விஸ்வநாதன் துவங்கிய நிறுவனம். அவருடன் வசிக்கும் இவர்தான் நிறுவனத்தின் நிர்வாகங்களை கவனித்து வருவார். நிறுவனத்தை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்தி வருவார்.
இவர்கள் வீட்டு உதவியாளராக கண்ணம்மா என்பவர் இருப்பார். இவரது தாய் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்திருப்பார். கிருஷ்ணன், இளகிய மனம் கொண்ட மெக்கானிக். மும்பையில் பணிசெய்து வந்தார். அவரது தாயை பார்க்க சென்னை வருவார்.
இவர்கள் இருவரும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொள்ளும் முதல் சந்திப்பே கடும் மோதலுடன் இருக்கும். இந்நிலையில் கிருஷ்ணனின் தாய் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார். எனவே மும்பையில் உள்ள வேலையை விட்டுவிட்டு சென்னையில் தங்க முடிவு செய்வார். அவர் பணி நிமித்தம் செல்லும்போது விஸ்வநாதனை தாக்கும் மர்ம நபர்களிடம் இருந்து அவரை காப்பாற்றுவார்.
அவர் அவர் வேலை கேட்டு வந்ததே விஸ்வநாதனிடம்தான் என்பதை கடைசியில் தெரிந்துகொள்வார். இதையடுத்து அவருக்கு பணி வழங்க விஸ்வநாதன் கூறுவார். ஆனால் அதற்கு சாந்தி மறுப்பார். கடைசியில் தந்தையின் வற்புறுத்தலால் அவருக்கு முத்த மெக்கானிக் பணியை வழங்குவார்.
கிருஷ்ணன், சாந்தி தேவியின் உதவியாளர் மீனாவை நண்பராக்கிக்கொள்வார். மீனா, கிருஷ்ணனை காதலிப்பார். ஒருமுறை கீழே விழப்போகும் சாந்திதேவியை கிருஷ்ணன் தூக்கி காப்பாற்றுவார். அதற்கு நன்றி கூறாமல் சாந்திதேவி கிருஷ்ணனை அறைந்துவிடுவார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா அவரது அறைக்கு வந்து அவரை அறைந்துவிடுவார். தனது தவறை உணர்ந்த சாந்தி தேவி, கிருஷ்ணாவை முதன்மை மெக்கானிக்காக பதவி உயர்வு தருவார். கிருஷ்ணன் யூனியன் தலைவர் ஆவார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படும்.
இந்நிலையில் மீனா, கிருஷ்ணாவை திருமணம் செய்ய முடிவு செய்து அவரிடம் கூறுவார். இதற்கு தனது தாயிடம் பேசிவிட்டு கூறுவதாக கூறுவார். இந்நிலையில் சாந்தி தேவியும் கிருஷ்ணனை திருமணம் செய்ய நினைப்பார். இது பழிவாங்குவதற்காக செய்யும் திருமணம். சாந்தி தேவி, கிருஷ்ணாவின் தாயை சமாதானம் செய்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கிவிடுவார்.
தனது தாயின் சொல்லை தட்டமுடியாத நிலையில் இந்த முடிவை கிருஷ்ணா ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதுகுறித்து எதுவும் அறியாத கிருஷ்ணாவின் தாய், இந்த திருமணத்தை நடத்தி வைப்பார். திருமணத்திற்கு பின்னர் சாந்தி தேவி, கிருஷ்ணாவை வீட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணுவார். ஆனால், கிருஷ்ணா யூனியன் தலைவராக தொடருவார்.
இதையடுத்து சாந்தி தேவி தனது நிறுவனத்தின் கொள்கைகளை மாற்றியமைப்பார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை நிறுவனத்தை கையில் எடுக்க, சாந்தி தேவி தனது வீட்டை அடித்து நொருக்குகிறார்.
மகனும், மருமகளும் சந்தோஷமாக இல்லை என்பதை அறிந்த கிருஷ்ணாவின் தாய் குற்ற உணர்வில் இறக்கிறார். இந்நிலையில் சாந்தி தேவியின் தொழில் போட்டியாளர் அவரை கொலை செய்ய முயற்சிக்கார், அதை தடுத்து அவரை கிருஷ்ணன் காப்பாற்றுகிறார். அதற்குபின் என்ன நடக்கும் என்பது தான் மீதிக்கதை.
டாபிக்ஸ்