தமிழ் செய்திகள்  /  Entertainment  /  32 Years Of Dharma Durai Annan Makimai Sonna Dharmadurai Movie

32 years of Dharma Durai: ‘உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன..’ அண்ணனின் மகிமை சொன்ன தர்மதுரை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 14, 2024 05:40 AM IST

தர்ம துரை படத்தை இயக்கிய ராஜசேகரின் கடைசி படம் இது. படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தின் போது கார் விபத்தில் சிக்கி காலமானார் என்பது தான் இங்கு சோகம்.

‘உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன..’ அண்ணனின் மகிமை சொன்ன தர்மதுரை!
‘உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன..’ அண்ணனின் மகிமை சொன்ன தர்மதுரை!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படம் கன்னடமொழியில் வெளிவந்த தேவா என்ற படத்தின் தமிழாக்கம். ரஜினி மற்றும் கௌதமி ஜோடியாக நடிக்க உடன் சரண்ராஜ் ராஜதுரையாகவும் நிழல்கள் ரவி ராம துரையாகவும் வைஸ்னவி வைபவியாகவும் அஜய் ரத்னம் அஜயாகவும் நடித்து வெள்ளி விழா கொண்டாடிய படம்.

பாலு,ஜஸ்வர்யா எனும் காதலர்கள் வீட்டில் இருந்து வெளியேறி விடுகின்றனர். ஐஸ்வர்யா தந்தையான ராஜதுரையும், அவர் தம்பி ராமதுரையும் கண்டு பிடித்து மீட்கும் போது ரஜினி தர்மதுரையாக அங்கு வருவார். துரை சகோதரர்கள் இருவரும் ரஜினியை கண்டு ஓடிவிட அதற்கான காரணத்தை ரஜினி மனைவியிடம் இளஞ்ஜோடிகள் கேட்க கௌதமி சொல்லும் காரணங்கள் பிளாஷ் பேக்கில் காட்சிகள் விரிந்து கதை சொல்கிறது.

தர்மதுரையின் இரண்டு தம்பிகள் தான் ராஜுவும் ராமுவும். அவர்கள் மீது கொண்ட பாசத்தால் படிக்கவும் தொழில் செய்யவும் ஏமாற்றி பணம் வாங்கி தவறான வழியில் சென்று பணக்காரர்கள் ஆவார்கள். அந்த நேரத்தில் தம்பிகளுக்காக செய்யாத கொலைக்கு பொறுப்பு ஏற்று சிறை செல்கிறார் தர்மதுரை. மேலும் பணத்தேவைக்காக தம்பிகள் இருவரும் சேர்ந்து தனது தந்தையையும், தர்மதுரையின் மகனையும் கொன்று விடுவர். தப்பிய ரஜினியின் மனைவி கௌதமி மூலம் இந்த உண்மைகளை தெரிந்து கொள்வார். தம்பிகளை ஒதுக்கி வைத்து விட்டு தனியாக வாழும் ரஜினி அவரது தம்பிகளை தண்டித்தாரா? ஏற்றுக்கொண்டாரா என்பது கதை. அண்ணன் தம்பி பாசத்தை அழுத்தமாக சொன்ன கதை.

ராஜசேகர் இயக் பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனங்கள் எழுத லடசுமண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமநாதன், சிவராமன் தயாரிப்பில் வெளிவந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற படம்.

இளையராஜா இசையில்.. அண்ணன் என்ன தம்பி என்ன, மாசி மாசம் ஆளான பொண்ணு, சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி, ஆணென்ன பெண்ணென்ன ஆகிய பாடல்களை இன்றும் முனுமுனுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

1991ல் பொங்கல் வெளியீடாக வந்து ரசிகர்கள் கொண்டாடிய படம் வெள்ளிவிழா கண்டது. அந்த காலத்திலேயே பத்து கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த படம். 

இந்த படத்தை இயக்கிய ராஜசேகரின் கடைசி படம் இது. படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தின் போது கார் விபத்தில் சிக்கி காலமானார் என்பது தான் இங்கு சோகம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.