32 years of Ajith Kumar: தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்.. 32 ஆண்டுகால அஜித்தின் போராட்டம்!
32 years of Ajith Kumar: நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிக்க தொடங்கி 32 வருடங்கள் ஆகிறது. அதனை கொண்டாடும் வகையில் சிறப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், உருவாகி இருக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் இன்று ( ஆகஸ்ட் 3 ) நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிக்க தொடங்கி 32 வருடங்கள் ஆகிறது. அதனை கொண்டாடும் வகையில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு உள்ளது. அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள பிளாக் & ஒயிட் போஸ்டரில் அஜித், ரத்தக் கறையுடன் இருக்கிறார்.
தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்
மேலும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டரில், “ 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்.. யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி ” என கூறப்பட்டுள்ளது.
அஜித் சினிமாவில் நுழைந்து 32 ஆண்டுகளை கொண்டாடி வரும் அஜித் ரசிகர்கள், விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ள ஸ்பெஷல் அப்டேட்டால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
முன்னதாக, விடாமுயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில், அந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் லீக் புகைப்படங்கள், அஜித்தின் லுக் போன்ற எந்த வீடியோக்கள் வந்தாலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வந்தார்கள். காரணம், விடாமுயற்சி அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்தது, காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததுதான்.
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கினார். பொங்கல் பரிசாக வெளியான இந்தத்திரைப்படம் வெற்றி பெற்றது. இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது.
உள்ளே வந்த மகிழ் திருமேனி
இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனாலும், அதற்கடுத்ததாக, அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் வெளியாக வில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அந்தப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் படக்குழு அதனை கண்டுகொள்ளவே இல்லை.
இந்த நிலையில், விடாமுயற்சி கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வீடியோவை வெளியிட்ட அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, படத்தை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் போது, படம் குறித்தான தவறான தகவல்கள் படக்குழுவை வருத்தமடைய செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.
விடாமுயற்சி ரிலீஸ் எப்போது?
அண்மையில் மீண்டும் விடாமுயற்சி தொடர்பான சில தகவல்கள் சமூகவலைதளங்களில் சலசலத்தன. அதில் விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம், தான் தயாரித்த லால் சலாம் படம் தோல்வி அடைந்த காரணத்தினால் பண நெருக்கடியை சந்தித்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தள்ளிப்போடுவதாகவும், படப்பிடிப்பை நடத்த அந்த நிறுவனம் சரிவர ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறியதாக தகவல் வெளியானது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்