30 Years of Walter Vetrivel : திரையரங்கில் 200 நாட்கள் திரையிடப்பட்டு சாதனை! 30 ஆண்டுகளில் வால்டர் வெற்றிவேல்!
30 Years of Walter Vetrivel : திரையரங்கில் 200 நாட்கள் திரையிடப்பட்டு சாதனை! 30 ஆண்டுகளில் வால்டர் வெற்றிவேல்!
வால்டர் வெற்றிவேல், 1993ம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாக நல்ல வெற்றிபெற்ற திரைப்படம். திரையரங்குகளில் 200 நாட்கள் திரையிடப்பட்டு சாதனை செய்த படம். இந்தப்படம் தெலுங்கில் எஸ்.பி.பரசுராம் என்ற பெயரிலும், இந்தியில் குதார் என்ற பெயரிலும், கன்னடத்தில் தளவாயி என்ற பெயரிலும் மீண்டும் எடுக்கப்பட்டது.
வால்டர் வெற்றிவேல், ஐபிஎஸ் அதிகாரி. சுமதி என்பவர் நடனமாடும் பெண், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை படம் பிடித்து வைத்திருக்கும் கும்பல் குறித்து அவருக்கு தெரியும். வால்டர் வெற்றிவேல் அந்தப்பெண் மீது காதல் வலையில் விழுவார். வில்லன்கள் அவ ரை பாலியல் பலாத்காரம் செய்ய முயலும்போது அதை படம் பிடிக்கும் வால்டரின் தம்பியை சுமதிக்கு நன்றாக தெரியும்.
இதனால் அவர் எங்கு தன்னை காட்டிக்கொடுத்துவிடுவாரோ என்று பயந்த அந்த தம்பி வில்லன்களிடம் சுமதியை பழிவாங்கும்படி கூறுவார். இதனால் வில்லன்கள் அவரை அடித்ததில் அவருக்கு கண் பார்வை போய்விடும்.
இந்நிலையில் அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்துவிடும். இதற்கிடையில் ராயப்பா என்ற போலீஸ் அதிகாரி வில்லன்கள் ஜெயிலில் இருந்து தப்பிக்க உதவி செய்வார். இது வால்டர் வெற்றிவேலுக்கு தெரியவரும், ஆனால் ராயப்பா போலீசில் இருந்து விலகி அமைச்சர் ஆகிவிடுவார்.
இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறக்கும். அப்போது அவர் மருத்துவரிடம் கண் பார்வை மீண்டும் வருவதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள். மருத்துவர்களும் சுமதிக்கு விரைவில் கண் பார்வை கிடைத்துவிடும் என்று கூறுவார். இதனால் அந்த தம்பிக்கு மீண்டும் அச்சம் ஏற்படவே, சுமதியைக்கொல்ல பாலில் விஷம் கலந்து வைப்பார். ஆனால், இது தெரியாத சுமதி குழந்தைக்கு பாலை கொடுத்தவுடன் குழந்தை இறந்துவிடும்.
இந்நிலையில் ராயப்பாவுக்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக வால்டர் நியமிக்கப்படுவார். இதற்கிடையில் சுமதியின் அறுவைசிகிச்சை நடைபெறும். அப்போது வில்லன்கள் மீண்டும் சுமதியை கொலை செய்ய முயற்சிப்பார்கள் என்பது வால்டருக்கு தெரியும். இதனால், வால்டர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று ராயப்பாவிடம் கேட்பார். ஆனால், அதற்கு ராயப்பா அவரை அவமானப்படுத்தவே, அவரை அடித்து தள்ளிவிட்டு அவர் ஒரு ஊழல்வாதி என்று கூறுவார். இதையடுத்து ராயப்பாவின் ஆட்கள் அந்த மேடையை கொளுத்துவார்கள். வால்டரின் பேச்சை கேட்ட அனைவரும் வால்டருக்கு ஆதரவு கொடுத்து அவரை செல்லவிடுவார்கள்.
இந்நிலையில் மருத்துவமனையில் சுமதிக்கு கண் அறுவைசிகிச்சை முடிந்து, அவர் கண் விழிப்பதற்குள் வில்லன் அவரை தாக்க வருவார்கள். அவரை வில்லன்களிடம் இருந்து காப்பாற்றி அவருக்கு பார்வை கிடைத்துவிடும். அவரது தம்பி என்ன ஆவார் என்பதுதான் மீதிக்கதை.
முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சுகன்யா நடித்திருப்பார்கள். வில்லனாக நாசர், கவுண்டமணி, ரஞ்சிதா, விஜயகுமார் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருப்பார்கள். இந்தப்படத்தை பி.வாசு இயக்கியிருப்பார். இந்தப்படத்திற்காக மூன்று கதைகளை வாசு கூற, அதில் சத்யராஜ் இந்த போலீஸ் கதைதை தேர்ந்தெடுத்து நடித்தார்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். சின்னராசாவே, மன்னவா, மன்னவா, பட்டுநிலா, பூங்காற்று, ஒவ்வொரு பக்கம் என அனைத்து பாடல்களும் படு ஹிட். இந்தப்படம் வெளியானபோது பத்திரிக்கைகளும் இதற்கு நல்ல விமர்சனம் கொடுத்திருந்தன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்