29 Years of Indira : 29 ஆண்டுகளில் இந்திரா! நடிகை சுஹாசினி மணிரத்னம் இயக்கிய ஒரே திரைப்படம்!
29 Years of Indira : படத்தின் கதாநாயகி பாத்திரத்தை சுஹாசினி, தனது தங்கை அனுஹாசனுக்கே கொடுத்திருந்தார். அனு, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரஹாசனின் மகள். இந்த கதாப்பாத்திரம் மிகவும் கனமான கதாபாத்திரம். புதுமுகம் இதில் நடிப்பது கடினமானது.
இந்திரா, சுஹாசினி மணிரத்னம் எழுதி இயக்கிய திரைப்படம். இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி மற்றும் அனுஹாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கதை என்ன?
ராதாரவி மற்றும் நாசர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.
நிலா காய்கிறது பாடல் பின்னணி பாடகி ஹரிணிக்கு நற்பெயரை வாங்கிக்கொடுத்த பாடல். இந்தப்பாடலை ஆண் குரலில் ஹரிஹரன் பாடியிருப்பார்.
பாடல்கள் யார்?
ஓடக்காரன் மாரிமுத்து, தொட தொட மலர்ந்ததென்ன பூவே, இனி அச்சம் அச்சம் இல்லை, முன்னேறுதான் ஆகிய பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுபவை. அனுஹாசன் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சாதியம், பெண்ணுரிமை ஆகியவற்றி படம் பேசியது. இந்தியாவில் உள்ள மாரனூர் என்ற கிராமத்தில் நடக்கும் கதையை படம் சித்தரிக்கும். பக்கத்து ஊருக்கும், இந்த கிராமத்தினருக்கும் நடைபெறும் பிரச்னைதான் படத்தின் கதை. சாதிய அமைப்பில் இருந்து விடுபட நினைக்கும் இளம் தலைமுறையினர் குறித்து படம் பேசியிருந்தது.
படத்தின் கதாநாயகி பாத்திரத்தை சுஹாசினி, தனது தங்கை அனுஹாசனுக்கே கொடுத்திருந்தார். அனு, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரஹாசனின் மகள். இந்த கதாப்பாத்திரம் மிகவும் கனமான கதாபாத்திரம். புதுமுகம் இதில் நடிப்பது கடினமானது.
ஆனால் நான் கதைப்படி நடிக்கத் துவங்கினேன். சில இடங்களில் உணர்ச்சி மிகுதியில் அழுகை வந்தது. ஆனால் எங்கும் கிளிசரினே பயன்படுத்தவில்லை என்று இப்படத்தில் நடித்தது குறித்து நடிகை அனுஹாசன் கூறியிருந்தார்.
இந்தப்படம் பிரியங்கா என்ற பெயரில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டது. இந்தப்படம் தமிழ்நாடு மாநில விருதுகளை பெற்றது. இந்தப்படத்துக்காக சிறந்த சினிமேட்டோகிராஃபர் விருது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. சிறப்பு ஜீரி விருதும் படத்துக்கு கிடைத்தது.
இந்த ஒரு படம் மட்டும்தான் சுஹாசினி இயக்கிய ஒரே திரைப்படம். இந்தப்படம் சுஹாசினிக்கு நல்லப்பெயரை வாங்கிக்கொடுத்தது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
சாதி பாகுபாடுகள் அதிகம் இருந்த காலத்திலும், பெண்களின் உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் இந்தப்படம் இரண்டு குறித்தும் பேசியது. இந்தப்படம் வெளியாகி தற்போது 30 ஆண்டுகளை நெருங்கும் வேளையிலும் நாம் இவற்றை கடந்துவிட்டோமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
கதாநாயகியின் பெயர்தான் படத்தின் பெயரும். இதில் அவரது தந்தை நாசர் ஊர் தலைவராக இருப்பார். அப்போது அவர் கொலை செய்யப்பட்டுவிடுவார். அதற்குபின்னர் அந்த பொறுப்புக்களை இந்திராதான் முன்னின்று செய்வார்.
அந்த கதாபாத்திரத்தில் மிகவும் அழுத்தமாக நடித்திருப்பார். உண்மையில் அவர் கூறியதைப்போல், இது புதுமுக நடிகைக்கு சவாலான கதாபாத்திரம்தான். அரவிந்தசாமியும் இந்தப்படத்தில் கலக்கியிருப்பார். இவர் வழக்கறிராக இருப்பார்.
ஊருக்கு உழைக்க முன்வரவேண்டும் என அவரை அழைக்கும்போது, அவர் இங்குள்ள பிரச்னைகளை சகிக்க முடியவில்லை என்று கூறி ஊருக்கு சென்றுவிடுவதாக கூறுவார். ஆனால், இந்திராவின் துணிச்சலைப்பார்த்து அவரும் பின்நாளில் மாறிவிடுவார்.
அடிமைத்தனத்தை போக்க வேண்டும் என்றும் படம் வலியுறுத்தியது. 1995ம் ஆண்டு மே 11ம் தேதி வெளியான இந்திரா திரைப்படம் குறித்து அந்தப்படம் வெளியாகி 29 ஆண்டு நிறைவையொட்டி, இன்று ஹெச்.டி தமிழ் இந்திரா படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்