25 Years of Monalisa : முகத்தை காட்டாமல் காதல் மொழியும் காதலன்! வெள்ளி விழா ஆண்டில் மேனிஷா என் மோனலிசா!
Monsha En Monalisa : இந்தப்படம் காதலின் வலியை உணர்த்தும் படமாக இருந்தாலும், இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள்தான் கிடைத்தன. இது வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியது. இந்தப்படம் ரிலீஸ் ஆனது

மோனிஷா என் மோனாலிசா, காதல் தமிழ் படம். இந்தப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தவர் டி.ராஜேந்தர். இந்தப்படத்தில் ஒரு காட்சியில் நடித்தும் இருப்பார். இந்த படத்துக்கு இசையமைத்தவரும் ஆவார். ராமன்காந்த் மற்றும் மும்தாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவருக்குமே இது முதல் படம்.
இந்தப்படத்தின் ஆரம்ப பாடலில் டி.ராஜேந்தரின் மகன்கள் சிலம்பரசன் மற்றும் குறளரசன் இருவரும் நடனமாடுவார்கள். அந்தப்பாடலை சிலம்பரசன் பாடியிருப்பார். இந்தப்படம் காதலின் வலியை உணர்த்தும் படமாக இருந்தாலும், இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள்தான் கிடைத்தன. இது வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியது. இந்தப்படம் ரிலீஸ் ஆனது
மும்தாஜ் நகரின் பிரபல பாப் பாடகியாக நடித்திருப்பார். அவருக்கு நிறைய ஃபேன்கள் இருப்பார்கள். அவரது பி.ஏ ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பார். கதாநாயகன், மிகவும் பணக்காரர். ஆனால், தாயை இழந்தவர். தந்தை மற்றும் சித்தியால் புறக்கணிக்கப்படுபவர். வாழ்க்கையில் மிகவும் விரக்தி நிலையில் இருப்பார்.
மும்தாஜை ஒரு நிகழ்ச்சியில் பார்த்துவிட்டு, காதலிக்கத் துவங்கிவிடுவார். அதுமுதல் மும்தாஜை ஃபோனில் தொடர்புகொண்டு தனது காதலை மொழிவார். ஆனால் மும்தாஜ் அவரின் காதலை ஏற்க மறுப்பார். பொதுவாகவே மும்தாஜ்க்கு ஆண்கள் மற்றும் காதல் மீது வெறுப்பு இருக்கும். ஆனால், அவர் தொடர்ந்து தனது காதலை வலியுறுத்தி வருவார். அதுவரை அவரது முகத்தை மும்தாஜிடம் காட்யிருக்கமாட்டார்.
தனது காதலை ஏற்றால் மட்டுமே தனது முகத்தை காட்டுவேன் என்று மும்தாஜிடம் கூறிவருவார். அவரது தொடர் முயற்சியின் பலனாக அவரது முகத்தை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையை மும்தாஜ் வைப்பார். மும்தாஜ்க்கும் அவரது மனது கொஞ்சம் கரைந்திருக்கும்.
இந்நிலையில் இருவரும் ஒரு இடத்தில் சந்திப்பதற்காக வருவார்கள். மும்தாஜ் வந்துவிடுவார். அவரது காதலர் அவரை பார்ப்பதற்காக உற்சாகமாக காரில் புறப்பட்டு வருவார். இருவரும் சந்திப்பார்களா? மும்தாஜ் அவரது காதலை ஏற்பாரா. இருவரும் திருமணம் செய்துகொள்வார்களா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
இந்தப்படம் ரிலீசானபோது ரஜினியின் படையப்பா படமும் ரிலீஸ் ஆகியிருந்தது. இதனால் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த கால சினிமா ரேட்டிங்கில் இது இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.
இந்தப்படம் தயாரிப்பில் இருந்தபோது சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால், இந்தப்படத்திற்கு போடப்பட்ட பிரமாண்ட செட்கள் அழிக்கப்பட்டன. முதலில் மோனிஷா என்ற பெயர் மட்டுமே படத்திற்கு வைக்கப்பட்டது. பின்னர் மோனிஷா என் மோனோலிஷா என்று படம் அழைக்கப்பட்டது.
இந்தப்படத்தில் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருந்தாலும், ஹலோ ஹலோ பாடலும், காதல் தேடி வாழ்ந்த காளை என்ற கிளைமேக்ஸ் பாடலும் படு ஹிட்.
இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, டைலாக், பாடல் வரிகள், இசை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என 7 முக்கிய ரோல்களையும் டி.ராஜேந்தரே செய்திருந்தார். இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் மும்தாஜ்க்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சில அந்தக்கால பத்திரிகைக்கள் இந்தப்படத்துக்கு நல்ல விமர்சனமும் கொடுத்திருந்தன.

டாபிக்ஸ்