Tamil News  /  Entertainment  /  20th Chennai International Film Festival To Begin From December 15

CIFF 2022: டிசம்பர் 15இல் சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பரில் தொடக்கம்
20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பரில் தொடக்கம்

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா திரைப்பட விழா வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் CIFF எனப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2003ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும்.

ட்ரெண்டிங் செய்திகள்

சினிமா பிரியர்களை கவரும் விதமாக சிறந்த சர்வதேச மற்றும் இந்திய பனோரமா திரைப்படங்கள் திரையிடுவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதையடுத்த சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக விருதுகளும் வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா, 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் டிசம்பர் 15 முதல் 22 வரை சென்னையில் நடைபெறுகிறது.

இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகும் திரைப்படங்கள் பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திரைப்பட விழாவுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாள்களில் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள படங்கள், பதிவுக் கட்டணம் உள்பட விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.

டாபிக்ஸ்