OTT: எல்லாமே போச்சு.. 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பேரழிவு - ரூ.100 கோடி பட்ஜெட் போட்டு ரூ.12 கோடி மட்டுமே வசூல்
OTT: ஆரோன் மே கஹான் தம் தா படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12.4 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது என்றால் என்ன பேரிழப்பு என்பதை புரிந்து கொள்ளலாம்.
பாலிவுட்டில் அஜய் தேவ்கனின் கேரியரில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் படத்தின் பெ யர் ஆரோன் மே கஹான் தம் தா. தபுவும் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்தது.. இப்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
ஆரோன் மே கஹான் தம் தா ஓடிடி ஸ்ட்ரீமிங்
பாலிவுட் மூத்த நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் தபு நடித்துள்ள படம் ஆரோன் மே கஹான் தம் தா. ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 27 ) முதல் Amazon Prime வீடியோ ஓடிடியில் கிடைத்து வருகிறது. உண்மையில், இந்த படம் இம்மாதம் 13 ஆம் தேதி Amazon Prime வீடியோவில் வெளியிடப்பட்டாலும் , அதை இரண்டு வாரங்களுக்கு வாடகைக்கு மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டடு இருந்தது. இதனால் பலரும் சந்தா செலுத்தி பார்க்க தயக்கம் காட்டினார்கள்.
அதுவும் ஒருமுறை வாடகையாக ரூ. 349 ஆக இருந்ததால் இத்தனை நாட்களாக படத்திற்கு அதிக வரவேற்பு இல்லை. ஆனால் இன்று முதல் படத்தை Amazon Prime வீடியோ சந்தா இல்லாமல் மட்டுமே பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12.4 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது என்றால் என்ன பேரிழப்பு என்பதை புரிந்து கொள்ளலாம். இது அஜய் தேவ்கனின் கேரியரில் மிகப்பெரிய பேரழிவாக அமைந்தது.
ஆரோன் மே கஹான் தம் தா திரைப்படம் என்ன?
நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் தபு நடித்த ஆரோன் மே கஹான் தம் தா திரைப்படம் . இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பத்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு காதல் த்ரில்லர் வகையை சேர்ந்த திரைப்படம். நீரஜ் பாண்டே இயக்கி உள்ளார். படம் ஒரு ஜோடியை மட்டுமே சுற்றி வருகிறது. கிருஷ்ணா (அஜய் தேவ்கன்) மற்றும் வசுதா (தபு) ஆகியோரின் காதல் கதை 23 வருடங்கள் இணைந்து இருக்கிறது.
சிறையில் கிருஷ்ணா
கிருஷ்ணா பல கொலை வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டதால் வசுதா வேறு திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணா பொது மன்னிப்புக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு வசுதாவை சந்திக்க விரும்புகிறார். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை இந்த ஆரோன் மே கஹான் தம் தா படத்தின் கதையாகும்.
ஆனால் இந்த படம் ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டது. மிகப்பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் முதல் நாளான ஆகஸ்ட் 2 ஆம் தேதி 1.85 கோடி ரூபாய் ஓப்பனிங்ஸ் மட்டுமே கிடைத்து உள்ளது. இந்த படம் 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாக மாறியது. 148 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அஜய் தேவ்கனின் மைதானமும் இந்த வருடம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இது அவரது ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.
டாபிக்ஸ்