தமிழ் செய்திகள்  /  Entertainment  /  2024 Golden Globes: Stream Live From Various Locations, Red Carpet Time, Host

2024 Golden Globes: ஓபன் ஹைமரா.. பார்பியா?.. கப் யாருக்கு? - கோல்டன் குளோப் விருதுகள்! - தொகுப்பாளர் யார் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2024 02:37 PM IST

சிபிஎஸ் மற்றும் பாராமெளண்ட் + ஆகிய ஆப்களில் சந்தா சேவையை பெற்று இருப்பவர்கள் இந்த விழாவை நேரலையாக பார்க்கலாம்.

Replicas of Golden Globe statues appear behind the podium at the nominations for the 81st Golden Globe Awards at the Beverly Hilton Hotel on Monday, Dec. 11, 2023, in Beverly Hills, Calif. The 81st Golden Globe Awards will be held on Sunday, Jan. 7, 2024. (AP Photo/Chris Pizzello)
Replicas of Golden Globe statues appear behind the podium at the nominations for the 81st Golden Globe Awards at the Beverly Hilton Hotel on Monday, Dec. 11, 2023, in Beverly Hills, Calif. The 81st Golden Globe Awards will be held on Sunday, Jan. 7, 2024. (AP Photo/Chris Pizzello) (Chris Pizzello/Invision/AP)

ட்ரெண்டிங் செய்திகள்

81 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஜனவரி 7ம் தேதியான நாளை அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கும் 

கோல்டன் குளோப் விருதுகள் 2024 நேரடி ஸ்ட்ரீமிங்!

சிபிஎஸ் மற்றும் பாராமெளண்ட் + ஆகிய ஆப்களில் சந்தா சேவையை பெற்று இருப்பவர்கள் இந்த விழாவை நேரலையாக பார்க்கலாம். 

அப்படி இல்லாதவர்கள் அடுத்த நாளான திங்கள் கிழமை பல்வேறு சேனல்களில் பார்க்க முடியும். (FuboTV, Hulu with Live TV, YouTube TV) 

3 மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் ஜோ கோய் தொகுத்து வழங்க இருக்கிறார்.

கோல்டன் குளோப் பரிந்துரைகள் 2024

 

நாமினேஷன் பட்டியலில் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம், நோலனின் ஓபன்ஹைமர் திரைப்படத்தை விட 1 புள்ளி அதிகமாக பெற்று முன்னிலையில் இருக்கிறது.

சிறந்த மோஷன் பிக்சர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

 • ஓபன்ஹைமர்
 • கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர்
 • மூன் மேஸ்ட்ரோ
 • ஃபாஸ்ட் லைவ்ஸ்
 • அனாடமி ஆஃப் எ ஃபால்
 • தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த திரைப்பட இசை 

 • பார்பி
 • ஏர்
 • அமெரிக்கன் ஃபிக்ஷன்
 • தி ஹோல்டோவர்ஸ்
 • மே டிசம்பர்

முழு பட்டியலைப் படிக்க >> 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.