Lesa Lesa: இறகைப்போல இளைஞர்களின் இதயத்தை வருடிய படம் - 20ஆம் ஆண்டில் லேசா லேசா
லேசா லேசா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகின்றன.

வித்தியாசமான கதைகலத்தைக் கொண்டு எத்தனையோ திரைப்படங்கள் வெற்றியும் அடைந்துள்ளது தோல்வியையும் பெற்றுள்ளது. ஆனால் வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு முக்கிய காரணம் எதுவென்றால் அதன் திரைக் கதையும், இசையும் தான்.
இது போன்ற திரைக் கதையையும், இசையையும் லாவகமாகக் கையாள தெரிந்தவர் இயக்குநர் பிரியதர்ஷன். அப்படிப்பட்ட வெற்றி திரைப்படங்களில் ஒன்று தான் லேசா லேசா. புதுமுக நடிகர்களைக் கொண்டு மிகப்பெரிய சினிமா பட்டாளங்களை வைத்து மிகப்பெரிய வெற்றி படைப்பை கொடுத்தார் இயக்குநர் பிரியதர்ஷன்.
முழுக்க முழுக்க காதலையும் நகைச்சுவையும் அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் நகரும். இந்த திரைப்படத்தின் முக்கியமான மிகப்பெரிய பலம் இசை. இந்த சீசனில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நிகர் அவர் மட்டுமே. அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.