மாமா குட்டிகளை அறிமுகப்படுத்திய லவ் டூடே! 2 ஆண்டுகளை கடந்தும் இன்றும் சூப்பர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மாமா குட்டிகளை அறிமுகப்படுத்திய லவ் டூடே! 2 ஆண்டுகளை கடந்தும் இன்றும் சூப்பர்!

மாமா குட்டிகளை அறிமுகப்படுத்திய லவ் டூடே! 2 ஆண்டுகளை கடந்தும் இன்றும் சூப்பர்!

Suguna Devi P HT Tamil
Nov 04, 2024 03:57 PM IST

இந்த கால ஜென் z கிட்ஸ்களுக்கான ஒரு சிறந்த காதல் படமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் தான் லவ் டூடே. இப்படத்தில் தற்கால காதலர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளையும், பிணைப்பையும் தெளிவாக காட்சி அமைத்து இருந்தார்.

மாமா குட்டிகளை அறிமுகப்படுத்திய லவ் டூடே! 2 ஆண்டுகளை கடந்தும் இன்றும் சூப்பர்!
மாமா குட்டிகளை அறிமுகப்படுத்திய லவ் டூடே! 2 ஆண்டுகளை கடந்தும் இன்றும் சூப்பர்!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் முதல் படமான கோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்கி நடித்த படம் லவ் டூடே , இப்படத்தில் இவானா இவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். மேலும் யோகி பாபு, ரவீணா ரவி மற்றும் ராதிகா உட்பட பலர் நடித்து இருந்தனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் மெகா ஹிட் ஆகின. குறிப்பாக வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் ரூ. 100 கோடி வசூலை அள்ளிக் குவித்தது. 

ஜென் z கிட்ஸ் காதல் கதை 

இந்த கால காதலர்களின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்கள் மற்றும் பந்தத்தை காட்டும் படமாக இது அமைந்து இருந்தது. ஐ. டி. நிறுவன ஊழியராக பணிபுரியும் உத்தமன் பிரதீப் மற்றும் நிகிதா இருவரும் காதலிக்கிறார்கள். மேலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நதின்றாக தெரியும் என்ற நம்பிக்கையோடு காதலிக்கிறார்கள். இந்த காதல் நிகிதாவின் அப்பாவுக்கு தெரியவர உத்தமனிடம்  பேசுகிறார். இதை அறிந்த நிகிதாவின் அப்பா இருவரும் தங்கள் போனை ஒரே ஒரு நாள் மாற்றிக்கொள்ள வேண்டும், பிறகு சுமூகமாக எல்லாம் சென்றால் திருமணம் என்ற நிபந்தனை போடுகிறார். அவரின் நிபந்தனை படி இருவரும் போனை மாற்றிக்கொள்கிறார்கள். இவர்களது போனில் இருக்கு  அவரவர் ரகசியங்கள் மற்றவருக்கு தெரியவர இருவருக்கும் சண்டை வருகிறது. 

இந்த சந்தேகத்தில் இருந்து விடுபட்டு ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிபடையில் இருவரும் சேர்கின்றனர். இதற்கிடையில் பிரதீப்பின் அக்கா ரவீணா திருமணம் செய்யப்போகும் யோகிபாபு மீதும் அவரது அக்காவிற்கு சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகத்தில் இருந்தும் யோகிபாபு விடுபட்டு இருவரும் சேர்க்கின்றனர். ராதிகா, யோகிபாபு ஆகியோரை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்திய விதம், யுவனின் இசை என படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் பல சிறப்பம்சங்கள் இருந்தன. 

ரசிகர்களின் மனதை கவர்ந்த லவ் டூடே 

தமிழில் பல நூறு கோடி வசூல் செய்த இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது வெளியானது. மேலும் இப்படம் தெலுங்கு ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. மேலும் இப்போது வரை இதில் இடம்பெற்ற மாமா குட்டி பாடல் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் இப்படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கதில் க்ரீத்தி ஷெட்டியுடன் நடித்து வருகிறார். 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.