விறு விறு திரைக்கதையில் சூர்யா த்ரிஷா நடித்த ஆறு படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் சிங்கம், வேல் போன்ற படங்கள் உருவாகியுள்ளன. இவர்களது கூட்டணிக்கு அடித்தளமாக இருந்தது 2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஆறு படம்.

இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் சிங்கம், வேல் போன்ற படங்கள் உருவாகியுள்ளன. இவர்களது கூட்டணிக்கு அடித்தளமாக இருந்தது 2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஆறு படம். இப்படம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில் வெளியாகியது. 19 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இடம் தற்போது வரை சூர்யாவின் கரியரில் ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது.
ஹரியின் திரைக்கதை
அதிரடி திரைக்கதை என்றால் அது இயக்குனர் ஹரி என்ற பெயர்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அவரது அனைத்து படங்களிலும் திரைக்கதை அதிரடியாக நகரும். மேலும் எந்த தொய்வும் ஏற்படாத வண்ணம் அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளுடன் படத்தை நகர்த்தி இருப்பார். இந்த வரிசையில் “ஆறு” படமும் மிகவும் அதிரடியான திரைக்கதையுடனும், வேகமாக நகரும் கதைக்களத்துடனும் அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
மேலும் மௌனம் பேசியதே படத்திற்கு பின்னர் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ஆறு திரைப்படம் அவர்களின் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து முழுதாக எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இருவருக்கும் இடையே வரும் காதலும் அதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் அற்புதமாக அமைந்தது.
