17 Years Of Mozhi: ‘மனிதர்க்கு மொழியே தேவையில்ல..’ மவுனத்தில் மனதை பறித்த மொழி!
மொழி படத்தில் தன் இரண்டு கண்ணால் பேசி ஒட்டு மொத்த ரசிகர்களையும் இன்று வரை கட்டிபோட்டு வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது உணர்வுகளை கடந்த வார்த்தைகள் அத்தனை அவசியம் இல்லை என்பதை மொழி திரைப்படம் பொட்டில் அடித்தார் போல் உணர்த்தியது.
பேசமலேயே நம்மை பேச வைத்த ஜோதிகாவின் மொழி. இந்த படத்தை அத்தனை எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஜோதிகாவின் திரை வாழ்வில் மிகவும் முக்கியமான படங்களில் மொழி படத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. மொழி படத்தில் தன் இரண்டு கண்ணால் பேசி ஒட்டு மொத்த ரசிகர்களையும் இன்று வரை கட்டிபோட்டு வைத்திருக்கிறார் ஜோதிகா என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது உணர்வுகளை கடந்த வார்த்தைகள் அத்தனை அவசியம் இல்லை என்பதை மொழி திரைப்படம் பொட்டில் அடித்தார் போல் உணர்த்தியது. திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை இன்று திரும்பி பார்ப்போம்
நடிகர்கள்
கடந்த 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்கி இருந்தார். ஜோதிகா அர்ச்சனா கதாபாத்திரத்தில் படத்தின் நாயகியாகவும், பிரித்விராஜ் கார்த்திக் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடித்திருந்தனர். பிரகாஷ் ராஜ், விஜி கதாபாத்திரத்தில் படம் முழுவதும் நாயகனோடு பயணம் செய்தார். மேலும் சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபோல், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கதை
கார்த்தியும் விஜியும் இசையமைப்பாளரிடம் இசைபலகை வாசிப்பவர்களாக பணியாற்றுவர். நண்பர்களான இருவரும் அடுக்கு மாடி குடியிருப்பில் புதிதாக வீடு எடுத்திருப்பர். வீட்டிற்கு குடிபோன முதல் நாளிலேயே அடுக்குமாடி செயலர் அனந்தகிருஷ்ணன் திருமணமானவர்களுக்கு மட்டும் தான் இங்கு குடியிருக்கலாம் . அதனால் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறுவார்.
இதையடுத்து கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ளும் படி விஜி கூறுவார். ஆனால் மனதை கவரும் பெண்ணை மட்டுமே திருமணம் புரிவேன் என்பார் கார்த்தி.
இதற்கிடையில் எதேர்ச்சையாக சாலையில் அர்ச்சனாவின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் மனதை இழப்பார் கார்த்திக். அர்ச்சனா அங்கிருந்து கிளம்பி விடவே விஜியிடம் அவளை எப்படியும் கண்டடைவேன் என்பார் கார்த்திக். கடைசியில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சனாவும் வசிப்பது தெரியவரும். திடீரென அர்ச்சனாவின் பாட்டி மயக்கமடைந்து விட அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். அப்போது தான் கார்த்திக்கிற்கு அர்சனாவிற்கு வாய் பேச முடியாது, காது கேட்காது என்பது தெரியவரும்.
இதையடுத்து விஜி கார்த்திக்கை வேறு பெண்ணை மணக்கும் படி வற்புறுத்த ஆனால் கார்த்திக் மறுத்து அர்ச்சனாவே காதலித்து மணப்பது என்று முடிவெடுப்பான். கடைசியாக அர்ச்சனாவும் கார்த்திக்கும் எப்படி இணைந்தனர் என்பதே படத்தின் கதை.
படத்தில் காமடிக்கு பஞ்சமே இருக்காது. முதல் சீனில் பண்ணையார் பொண்ணுக்கு பிச்சக்காரன் பூ வச்சா லவ் வந்துமா என்று விஜி கேட்பான். அவன்ஹீரோடா அவன் வச்சா வரும் என்பான் கார்த்திக். நானும் நீயும் வேற யாருக்காவது வச்சா என்று கேட்கும் விஜியிடம் போலீஸ் வரும் என்ற இடத்தில் ஆரம்பிக்கும் காமெடி படம் முழுவதும் நிரம்பி இருக்கும்.
கார்த்தி நீ பேச்சுலர்னா வீடு தர மாட்டாங்க. நா பேச்சுலர்னா பொண்ணே தர மாட்டாணுங்கன்னு படம் முழுவதும் பிரகாஷ்ராஜ் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார்.
படத்தில் ஜோதிகா வரும் போது தலையில் பல்பு எரியும். மணி அடிக்கும் என காதலை வித்தியாசமாக காட்சி படுத்தி இருந்தார் ராதா மோகன். அந்த படம் வந்த நாட்களில் இது இளைஞர்களை மிகவும் கவர்ந்த காட்சியாக அமைந்தது.
இப்படி படம் முழுவதும் ரசித்து ரசித்து எடுத்திருப்பார் இயக்குநர். படத்தில் கண்ணால் பேசும் பெண்ணே என்னை மண்ணிப்பாயா, காற்றின் மொழி, மௌனமே உன்னிடம், செவ்வானம் சேலையை என பாடல்கள் அனைத்தும் ஹிட்.
படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்தும் இன்றும் காற்றின் மொழி பாடல் கேட்கும் போது ஒரு நிமிடம் நின்று ரசிக்க வைக்கும். படத்தின் இறுதி காட்சியில் பிரித்திவி ராஜ் வெடித்து பேசுவதும்.. ஜோதிகா அதற்கு கண்களினாலேயே டப் கொடுக்கும் காட்சியும் அத்தனை அழக. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜோதிகாவின் திரை டைரியில் மொழிக்கு நிகர் மொழிதான்
டாபிக்ஸ்