Box Office Collection: 15 நாளுக்கு பின் ஏறிய நீக், டிராகன் பட வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Collection: 15 நாளுக்கு பின் ஏறிய நீக், டிராகன் பட வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Box Office Collection: 15 நாளுக்கு பின் ஏறிய நீக், டிராகன் பட வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Malavica Natarajan HT Tamil
Published Mar 09, 2025 01:23 PM IST

Box Office Collection: தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் படம் 15 ஆம் நாளுக்கு பின் வசூலில் ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Box Office Collection: 15 நாளுக்கு பின் ஏறிய நீக், டிராகன் பட வசூல்..  பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
Box Office Collection: 15 நாளுக்கு பின் ஏறிய நீக், டிராகன் பட வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

தனுஷின் நீக்

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு என தனியாக பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் பலராலும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தனுஷ் இளம் தலைமுறை நடிகர்களை வைத்தும், அவர்களது காதல், காதல் தோல்வி குறித்தும் பேசும் வகையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா, பிரியா வாரியர் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன. காதலுக்கும் காதல் தோல்விக்கும் இடையே தவிக்கும் இளம் தலைமுறையினரை பற்றிய படம் இது பலரும் புகழ்ந்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நீக் வசூல்

இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியான 16 ஆம் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 0.12 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறியுள்ளது. இந்தப் படம் மொத்தமாக தமிழ்நாட்டில் 7.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது தெரியவருகிறது. இதே வசூல் தான் இந்திய அளவிலும் எதிரொலித்துள்ளதாகத் தெரிகிறது.

அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன்

ஓ மை கடவுளே எனும் வெற்றிப் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய படம் டிராகன், கல்லூரி காலத்தில் ஜாலியாக அரியர் வைத்து சுற்றித் திரியும் ஒருவன் வாழ்க்கையில் முன்னேறுவது பற்றி பேசும் கதை தான் டிராகன். இந்தப் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் நடித்துள்ளனர். அவர்களுடன் விஜே சித்து, ஹர்ஷத் கான் போன்றோரும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

டிராகன் வசூல்

இந்தப் படம் 16 ஆம் நாள் வசூல் விவரங்கள் குறித்து திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிராகன் திரைப்படம் தமிழ்நாடு அளவில் 16 ஆம் நாளில் மட்டும் 3.05 கோடி ரூபாய் வசூலையும் மொத்தமாக 71.3 கோடி ரூபாய் வசூலையும் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்திய அளவில் 101.6 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் உலக அளவில் சுமார் 132 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.