தமிழ் செய்திகள்  /  Entertainment  /  14 Years Of Vtv: Silambarasan Trisha Vinnaithandi Varuvaya Crossed 750 Days In Theater

14 years of VTV: சிம்பு - கெளதம் - ARR மேஜிக்.. விடிவி இதுவரை எவ்வளவு நாள் திரையரங்கில் ஓடியிருக்கிறது தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 26, 2024 03:29 PM IST

திரை அரங்குகளில் மறு வெளியீட்டில், அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாவதாக ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" (DDLJ) இருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா!
விண்ணைத்தாண்டி வருவாயா!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்தின் வாயிலாக முதன்முறையாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்தார் கெளதம். 

கார்த்திக்கின் விடாது துரத்தும் காதலையும், அதற்கு எதிர்வினை ஆற்றும் ஜெஸ்ஸியின் அலட்சியத்தன்மையையும், பின்னிப்பிணைந்து கெளதம் திரைக்கதை எழுத, அதற்கு கனகச்சிதமாக இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.  படம் வெளியாகும் முன்னரே, பாடல்கள் அனைத்தும் பம்பர் ஹிட்டடிக்க, படமோ எகிடுதகிடு ஹிட்டாகி, கல்ட் கிளாசிக்காக மாறியது. 

படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்று ஓய்ந்த பின்னரும் இந்தப்படத்திற்கு காதலர்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருக்கிறது. இதனால் ராயப்பேட்டையில் உள்ள பிவிஆர் தியேட்டரில் இந்தப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், இந்தப்படம் வெளியாகி இன்றோடு 14 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. 

முன்னதாக, திரை அரங்குகளில் மறு வெளியீட்டில், அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாவதாக ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" (DDLJ) இருக்கிறது. 

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன் TR நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா பெற்று இருக்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்