14 Years of Vinnaithaandi Varuvaayaa: 'இங்க என்ன சொல்லுது? Jessie Jessie-னு சொல்லுதா?'
2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. படம் வெளியான சமயத்தில் சரியாக போகவில்லை. ஆனால் சில தினங்களுக்குப் பிறகு இந்தப் படத்துக்கு ரீச் கிடைத்தது. தியேட்டர்களில் கூட்டம் கூட தொடங்கியது.
விண்ணைத்தாண்டி வருவாயா எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் எல்ரெட் குமார், ஜெயராமன், வி.டி.வி.கணேஷ் மற்றும் பி.மதன் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகித்தது. தமிழில் சிலம்பரசன், த்ரிஷா நடிப்பிலும், நாக சைதன்யா மற்றும் சமந்தா நடிப்பில் தெலுங்கில் ஏ மாயா சேசவே என்ற பெயரிலும் படமாக்கப்பட்டது.
2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. படம் வெளியான சமயத்தில் சரியாக போகவில்லை. ஆனால் சில தினங்களுக்குப் பிறகு இந்தப் படத்துக்கு ரீச் கிடைத்தது.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா மற்றும் படத்தொகுப்பு ஆண்டனி.
விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு இந்து தமிழ் இளைஞர் கார்த்திக்-கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த மலையாளி கிறிஸ்தவ பெண்ணான ஜெஸ்ஸி இவர்கள் இடையிலான காதலை சித்திரிக்கிறது.
கார்த்திக் காதல் வயப்படுவதும் அதை ஜெஸ்ஸியிடம் அதை சொல்வது பிறகு அவரும் விரும்புவதாக நகரும் கதையில் திடீர் திருப்பமாக ஜெஸ்ஸிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜெஸ்ஸி திருமணம் செய்து கொண்டாரா? கார்த்திக்கின் காதல் கைகூடியதா, திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற கார்த்திக்கின் மற்றொரு கனவு நிறைவேறியதா? இதற்கெல்லாம் எஞ்சிய பாதியில் விடை இருக்கும்.
இந்தப் படத்தில் சிம்பு 22 வயது இளைஞனாகவும், ஜெஸ்ஸி 23வயதுடையவராகவும் நடித்திருப்பார். வயதை காதல் பொருட்படுத்துவதில்லை என்பதை இந்தக் கதையில் காண்பித்திருப்பார் இயக்குநர் கவுதம். இந்தப்ப டத்தில் கணேஷ் கேமராமேன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அவருடைய கரகரப்பான குரலால் கவர்ந்திழுத்தார். அதன்பிறகு அவருடைய பெயருக்கு முன்னால் 'VTV' கணேஷ் என்றே ஆகிப்போனது.
'உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்' டயலாக் மிகப் பிரபலமானது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரிப்பீட் மோடில் கேட்க வைத்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசை காதல் கதைக்கு மேலும் இளமை சேர்த்தது என்று கூறலாம்.
சிம்பு, த்ரிஷா இந்தப் படத்திற்கு முன்பு நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவர்களின் நடிப்பு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
சினிமா விகடனுக்கு அளித்த நேர்க்காணல் ஒன்றில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், “விடிவி கணேஷனை நடிக்க வைத்தபோது பலரும் அவர் அந்தக் கதாபாத்திரத்துக்கு சரியாக இருக்கமாட்டார் என நினைத்தார்கள். ஆனால், நானும் சிம்புவும் அவர் அந்த கேமராமேன் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார் என நம்பினோம். அது கடைசியில் நடந்தது” என்று கூறியிருந்தார்.
டாபிக்ஸ்