12 years of 3 : ராம்-ஜனனி கெமிஸ்ட்ரி.. பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்.. 12 ஆம் ஆண்டில் 3 திரைப்படம்!
12 years of 3 : ராம்-ஜனனி கெமிஸ்ட்ரி இப்படத்தில் நல்ல வொர்க்கவுட் ஆகி இருக்கும். ஜனனி காதலை எதிர்க்க அவர் வீட்டில் நாடகம் செய்து பிரிக்க முயற்சி செய்யும் விதம் உணர்வு பூர்வமாக இருக்கும்.முதல் பாதி வழக்கமான காதல் கதை போல சென்றாலும், அடுத்த பாதியில் கதை சீரியஸான திருப்பத்தை கொடுக்கும்.

2012 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வெளியான திரில்லர் திரைப்படம் மூனு (3). இந்த திரைப்படத்தை ரஜினி மகள் ஐஸ்வர்யா எழுதி இயக்கியுள்ளார். அதே போல இப்படத்தின் தயாருப்பும் ஐஸ்வர்யா தான். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஷாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல சிவகார்த்திக்கேயன், சுந்தர்ராமு துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதேபோல இப்படத்தில் முதலில் அமலாபால் தான் நடிக்க இருந்தனர். ஆனால் சில முரண்பாடு காரணமாக அமலாபால் மற்றப்பட்டு ஸ்ருதி அந்த ரோலில் நடித்தார். ஆனால் இப்படத்தில் ஸ்ருதி- தனுஷ் கெமிஸ்ட்ரி அவ்வளவு அட்டகாசமாக அமைந்திருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தனுஷுக்காக சிறந்த நடிகர், சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான மூன்று பிலிம்பேர் விருதுகளை பெற்று தந்தது. அதேபோல அனிருத்க்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தது. 2ஆவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் , சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் ஆகிய மூன்று விருதுகளை தனுஷ் வென்றார் . "வை திஸ் கொலவெறி டி" பாடலின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கெளரவ விருந்தினராக அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.