வயிறு வலிக்கும் சிரிப்பு! விட்டுக் கொடுக்காத நட்பு! இன்றும் மாறாத என்றென்றும் புன்னகை திரைப்படம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வயிறு வலிக்கும் சிரிப்பு! விட்டுக் கொடுக்காத நட்பு! இன்றும் மாறாத என்றென்றும் புன்னகை திரைப்படம்!

வயிறு வலிக்கும் சிரிப்பு! விட்டுக் கொடுக்காத நட்பு! இன்றும் மாறாத என்றென்றும் புன்னகை திரைப்படம்!

Suguna Devi P HT Tamil
Dec 20, 2024 03:35 PM IST

இப்படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இதன் காட்சிகள் இன்றும் மக்களை மகிழ்வித்து வருகிறது.

வயிறு வலிக்கும் சிரிப்பு! விட்டுக் கொடுக்காத நட்பு! இன்றும் மாறாத என்றென்றும் புன்னகை திரைப்படம்!
வயிறு வலிக்கும் சிரிப்பு! விட்டுக் கொடுக்காத நட்பு! இன்றும் மாறாத என்றென்றும் புன்னகை திரைப்படம்!

நட்புக்குள்ளே 

இயக்குனர் ஐ. அஹமத் இயக்கத்தில் வெளியான இரண்டாவது பட தான் இந்த என்றென்றும் புன்னகை, இப்படத்தில் ஜீவா, சந்தானம் மற்றும் வினய் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். த்ரிஷா, ஆண்ட்ரியா மற்றும் நாசர் உட்பட பலரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். மூன்று நண்பர்களின் வாழ்க்கை, அவர்களது தொழில் காதல் மற்றும் பிரிவு என படம் நெடுக நட்பு என்ற ஒற்றை சொல்லுக்குள்ளேயே சுற்றி வரும். ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளல் இசையில் இன்றளவும் பாடல்கள் பிளே லிஸ்ட்டில் இடம்பெறுகின்றன. 

மூன்று நண்பர்கள் மூவருமே தனி விதம் பெண்களை பிடிக்காத ஜீவா, எல்லாப் பெண்களையும் கலாய்க்கும் சந்தானம், எல்லாப் பெண்களையும் முயற்சிக்கும் வினய் என மாறுபட்ட எண்ணங்கள் கொண்ட நண்பர்கள். ஜீவாவின் எண்ணமே கல்யாணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் இவர்கள் இருவரும் திடீரென இருவரும் திருமணம் செய்து விடுகின்றனர். இதனால் அவர்களை விட்டு பிரிகிறார் ஜீவா. ஆனால் பிரிந்த ஜீவாவிற்கு த்ரிஷா மீது காதல் வருகிறது. இருப்பினும் அவரது எண்ணத்திற்கும், ஈகோவிற்குமே முன்னுரிமை கொடுக்கிறார். 

இறுதியாக தந்தையின் பாசம், காதல் மாறும் நட்பு என அனைத்தையும் உணர்ந்து மனம் மாறுகிறார் ஜீவா. இதுவே இப்படத்தின் ஒட்டுமொத்த கதை. முற்றிலும் நகைச்சுவை, பிரிவு, சண்டை என எல்லா உணர்வுகளையும் கலந்து படம் சிறந்த பொழுது போக்கு படமாக வெளியானது. 

சந்தானத்தின் டைமிங் 

படத்தின் பெரும்பான்மை பலமாக சந்தானத்தின் காமெடி வசனங்கள் பெரிதும் உதவின. அனைத்து சூழ்நிலைகளிலும் பொருந்தும் வசனங்களால் தியேட்டர்கள் சிரித்து குலுங்கின. அதிலும் அவரது மனைவியுடனான காட்சிகளிலும், பெண்களை கலாய்க்கும் காட்சிகளிலும் என வசனங்களுக்கு விசில் பறந்தன. “செத்த நாய யாரு சாப்பிட சொன்னது”, “ஏன் இந்தியானறது நல்ல பேரு தானா”, என ஒவ்வொரு கட்சிகளும் இன்றும் டிவிகளில் ஓடினால் சிரிப்பு மழை தான் பொழியும். இந்த படத்திற்கு பின் ஒரு சில படங்களை தாண்டி சந்தானம் காமெடி நடிகராக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சந்தானத்தின் டைமிங் காமெடிகளை ரசிகர்கள் இன்றளவும் மிஸ் செய்கின்றனர். இவர் மீண்டும் காமெடி நடிகராக களம் இறங்கினால் நிச்சயம் தூள் பறக்கும்.   

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.