Prabhu Deva : 100 பாடல்கள் 100 நிமிட நடனம் நிகழ்ச்சியை சொதப்பிய பிரபுதேவா.. வெயிலில் காத்திருந்ததால் கொந்தளித்த மக்கள்!
Prabhu Deva : திரையில் பேசிய பிரபு தேவா நான் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மீட் பண்ண வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்த மாதிரி என் லைப்ல நிகழ்ச்சிக்கு வர ஒத்துக்கிட்டு வராம இருந்ததே இல்லை. இது தான் பஸ்ட் டைம். அதனால் இதை எப்படி அட்ரஸ் பண்றதுனு தெரியல. ஹெல்த் இஸ்யூவால அப்படி ஆகிடுச்சு என்றார்.

தென்னிந்திய சினிமாவில் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நபராக வலம் வரும் பிரபு தேவா இன்று 100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்கள் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் நிகழ்ச்சிக்கு வராததால் அங்கு காத்திருந்த பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்திய மைக்கேல் ஜாக்சன்
இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபு தேவா. அவர் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக திரைத்துறையில் வேலை செய்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் நடன இயக்குனராக இருந்த பிரபு தேவாவுக்கு நடனத்தின் மீது காதல் இருந்தது. பிரபு தேவா பின்னர் பரதநாட்டியம் மற்றும் பல்வேறு மேற்கத்திய நடன வடிவங்களைக் கற்றுக் கொண்டார், இறுதியில் 1990 ஆம் ஆண்டு நடன இயக்குநராக இருந்த பிரபு தேவா நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
எப்போதும் பிரபுதேவாவின் நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் பிரபு தேவா நடன இயக்குனராக பணிபுரிந்த பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிக்கு மாணவ மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.