கம்யூனிசம் பேசிய கத்தி! விஜய்யின் கத்தி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கம்யூனிசம் பேசிய கத்தி! விஜய்யின் கத்தி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!

கம்யூனிசம் பேசிய கத்தி! விஜய்யின் கத்தி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!

Suguna Devi P HT Tamil
Oct 22, 2024 02:12 PM IST

இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கம்யூனிசம் பேசிய கத்தி! விஜய்யின் கத்தி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!
கம்யூனிசம் பேசிய கத்தி! விஜய்யின் கத்தி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!

கம்யூனிசம் பேசிய கத்தி 

கத்தி படத்தில் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் என்ற இரு வேடங்களில் நடிகர் விஜய் நடித்து இருந்தார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் முழுவதுமாக வேறுபாடு காட்டியிருப்பார். துடிப்பான, புத்திசாலியான திருடனாக வரும் கதிரேசனாகவும் கலக்கி இருப்பார். அதே சமயத்தில் சாந்தமான, அறிவாளியாகவும், தங்கைக்கு இட்லியை வைத்து கம்யூனிசம் சொல்லித் தரும் ஜீவானந்தம் ஆகவும் சிறப்பாக நடித்து இருப்பார். தன்னூத்து கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான ஜீவானந்தம் அந்த ஊரில் உள்ள நீர் ஆதராத்தை கண்டறிந்து அந்த ஊர் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளார். 

இதற்கிடையில் அவர் அந்த நீர் ஆதாரத்தை கண்டு பிடித்ததும், ஒரு பெரிய கார்பரேட் நிறுவனம் அந்த கிராமத்தில் அத்துமீறி நுழைந்து அங்கு குளிர்பான கம்பெனி ஒன்றை தொடங்குகிறது. அந்த கம்பெனியை தடுத்து விவசாயிகளுக்கு நிலத்தை வாங்கி தர போராடி வருகிறார் ஜீவானந்தம். இந்நிலையில் சிறையில் இருந்து தப்பிக்கும் கதிரேசன், ஒரு விபத்தில் தன்னைப் போல ஜீவானந்தத்தை  பார்க்கிறார். பின் கதிரேசன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு  ஜீவானந்தத்தை சிறைக்குள்  அனுப்பி விடுகிறார். மேலும் ஜீவாவின் இடத்தில் இருக்கும் கதிரேசன் கார்ப்பரேட் கம்பெனியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு எதிராக இருக்க நினைக்கும் நிலையில் ஜீவா பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதனால் அவருக்கு பதிலாக விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நினைக்கிறார். இறுதியாக என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாகும்.

ஊழலை தோலுரித்த கத்தி 

இப்படத்தில் கம்யூனிசம் பேசப்பட்டது போல மேல் தட்டு மக்களின் அக்கறையின்மை மற்றும் பொறுப்பின்மை பெரிதாக பேசப்பட்டது. மேலும் தண்ணீரை வைத்து நாட்டில் நடக்க கூடிய அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியது. படத்தின் இறுதி கட்டத்தில் விஜய் பேசிய அனைத்து வசனங்களும் பெரும் அளவில் பேசப்பட்டன. மேலும் 2g ஊழல் குறித்த பேசிய காரணத்தால் இப்படம் சர்ச்சையில் சிக்கியது. 

வெற்றிக் கூட்டணி 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான துப்பாக்கி பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து கத்தி படம் உருவானது. இப்படமும் இந்த கூட்டணிக்கு வெற்றியை அள்ளித்தந்தது. மேலும் இப்படத்தின் வசூலும் 100 கோடியை தாண்டி சென்றது. மேலும் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அடிக்கோடிட்ட சில படங்களில் கத்தி திரைப்படமும் முக்கியமான படமாகும். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.