Exit polls 2024: மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு ஷாக்! பாஜகவுக்கு தூக்கி கொடுக்கும் மக்கள்! என்டிடிவி கருத்து கணிப்பு!
NDTV-Jan Ki Baat கருத்துக்கணிப்பின் படி 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு 21 முதல் 26 இடங்களும், திரிணாமுல் காங்கிரஸுக்கு 16-18 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
மேற்கு வங்கத்தில் மும்முனை போட்டி
41 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று உள்ளது.
ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என மூன்று அணிகளாக போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி இருந்தாலும், கம்யூனிஸ்ட் உடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி கைவிட வேண்டும் என்று கூறிதால் கூட்டணிக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் எந்த இடங்களையும் ஒதுக்காது என மம்தா தெரிவித்தால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி முகம்
மேற்கு வங்கத்தில் 21 முதல் 26 இடங்கள் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 16-18 இடங்களும் கிடைக்கும் என என்டிடிவி-ஜான் கி பாத் கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியா நியூஸ்-டி-டைனமிக்ஸ் கருத்து கணிப்புப்படி பாஜகவுக்கு 21 இடங்களும், திரிணாமுல் காங்கிரஸுக்கு 19 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் ரிபப்ளிக் பாரத்-மேட்ரைஸ் பாஜகவுக்கு 21 முதல் 25 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணித்துள்ளது. மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் கட்சிக்கு 16 முதல் 20 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்
2019 ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தின் 42 இடங்களில் பாஜக 18 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும் கைப்பற்றியது.
2024 கருத்து கணிப்பு நிலவரம்
இதற்கிடையில், ரிபப்ளிக் பங்களா அமைப்பு பாஜகவுக்கு 22 இடங்களும், திரிணாமுல் 18 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டை போலவே தற்போதும் காங்கிரஸ் 2 இடங்களில் வெல்லும் என தெரிவித்து உள்ளது.
காங்கிரஸுக்கு 0-2 இடங்கள் கிடைக்கும் என்று ஜன் கி பாத் கணித்துள்ளது. இந்தியா நியூஸ்-டி-டைனமிக்ஸ் 2 இடங்களையும், ரிபப்ளிக் பாரத்-மேட்ரைஸ் ஒரு இடங்கள் வரையும் காங்கிரஸ் கட்சி பெறலாம் என்று கணித்துள்ளது.
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று முன்கூட்டியே கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.
ரிபப்ளிக் டிவி-பி மார்க் கருத்துக்கணிப்பு 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஆளும் கூட்டணி 359 இடங்கள் வரை வெல்லும் என்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி 154 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது. ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் கருத்துக்கணிப்பு NDA க்கு 353-368 இடங்களும், எதிர்க்கட்சிகளுக்கு 118-133 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்தன.
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 362-392 இடங்களும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 141-161 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஜூன் 4ஆம் தேதி எண்ணி அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியான இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளது. வரும் ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டாபிக்ஸ்