தமிழ் செய்திகள்  /  Elections  /  Prime Minister Modi Lobbying In Salem Bjp General Meeting - Nda Alliance Party Leader Participation

PM Modi in selam: 'இந்த முறை 400க்கும் மேல்! திமுகவுக்கு தூக்கம் போச்சு!’ கலங்கிய மோடி! கதறிய தொண்டர்கள்!

Kathiravan V HT Tamil
Mar 19, 2024 01:35 PM IST

”இக்கூட்டத்தில் பாமக தலைவர் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புதியநீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்”

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

இக்கூட்டத்தில் பாமக தலைவர் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புதியநீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’பாரத அன்னை வாழ்க’ என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். கோட்டை மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டில் எனக்கும், பாஜகவுக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து நாடே பார்த்து வியந்து வருகிறது. நேற்று கோவையில் நடந்த வாகன பேரணியில் மக்கள் கடலில் பயணம் செய்தேன். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் கலைந்துவிட்டது. 

இந்தமுறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். நேற்று பாமக தலைவர்கள் நமது கூட்டணியில் இணைய சம்மதித்துள்ளனர். ஐயா மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் திறமைகளை கொண்டு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்கு வருக வருக என வரவேற்கிறேன். 

நான் பலமுறை சேலம் வந்துள்ளேன். இந்த முறை பழைய ஞாபகம் வருகிறது. 50 வருடங்களுக்கு முன் நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் போது சேலத்தில் ரத்னவேல் என்பவர் இந்த ஊரின் பெருமைகள் குறித்து என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார்.  அவர் பேச்சை கேட்டு என்னிடம் ஒரு ஈர்ப்பே வந்துவிட்டது. அவர் ஒரு விபத்தில் உயிர் இழந்துவிட்டார். எனக்கு இப்போது அவர் நினைவு வந்துள்ளது. 

சேலத்தில் நான் கால்பதித்த உடனே கே.என்.லக்‌ஷ்மண் அவர்களை நினைவுக்கூறுகிறேன். தமிழ்நாட்டில் பாஜக காலுன்ற பாடுபட்ட மனிதர். எமர்ஜென்சி காலத்தில் பல தடைகளை மீறி கட்சியை வளர்த்தார். மேலும் எனக்கு சேலம் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் நினைவு எனக்கு உள்ளது. கட்சிக்காக தனது உயிரை கொடுத்து உழைத்தார். அவரை கொலை செய்துவிட்டார்கள், சமூக துரோகிகள், அந்த நேர்மையாளரை நினைத்து இந்த மண்ணில் அஞ்சலி செலுத்துகிறேன். 

மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த இந்தி கூட்டத்தின் முதல் பேரணியில் அசல் ரூபம் தெரிய வந்துவிட்டது. இந்து மதத்தை அழிப்பது ஒன்றே அதன் நோக்கம் என இந்தி கூட்டணி பரப்புரையை தொடங்கி உள்ளது. 

இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ஓம் சக்தி என்ற வாசகம் உள்ளது. அன்னை மாரியம்மனை நாம் சக்தி வடிவமாக வழிபடுகிறோம். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி அம்மன்கள் சக்தியாக வழிபடுகின்றனர். இங்குள்ள சக்தி வாய்ந்த தெய்வங்கள் எல்லாம் பெண் வடிவத்தில் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி சக்தியின் ஆன்மீக அம்சத்தை அழித்துவிடுவோம் என கூறி வருகின்றனர்.

இந்தி கூட்டணி வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்து மதத்தை தாக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேறு மதம் குறித்து பேசுவதே இல்லை. 

தமிழ்நாட்டின் கலாச்சாரமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிருவ திமுக-காங்கிரஸ் கூட்டணி எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்தி கூட்டணியினர் செங்கோலை அவமதித்துவிட்டனர். 

இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் நினைப்பவர்கள் அழிந்து போய் உள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு அழிவு தொடங்க போகிறது. 

தமிழ்நாட்டில் முத்ரா கடனை அதிக அளவில் வாங்கி பெண்கள் பயன் அடைகின்றனர். பெண்கள்தான் பாஜகவின் பாதுகாப்பு கவசம் போல் உள்ளனர். இனி வரும் காலங்களில் மேலும் சிறப்பு வாய்ந்த திட்டங்கள் பெண்களை சென்றடையும். இது மோடியின் கியாரண்டி.

திமுக - காங்கிரஸ் கட்சிகள் பெண்களை கேவலப்படுத்துவதற்கு தமிழ்நாடுதான் சாட்சி, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது திமுகவினர் எப்படியெல்லாம் இழிவு படுத்தினார்கள் என்பதை நினைத்து பாருங்கள். இதுதான் இவர்களின் உண்மையான முகம். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் தரக்கூடிய தீர்ப்பு திமுகவுக்கு பாடமாக அமைய வேண்டும். திமுகவும், காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்ட தேச விரோத செயல்கள் இரு கட்சிகளிலும் நிறைந்துள்ளன. மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக எதிர்த்தது. 

2ஜி ஊழலை செய்த திமுக தனது 5ஜி எனப்படும் ஐந்தாவது தலைமுறையை அதிகாரத்திற்கு கொண்டு வர துடிக்கிறது. 

மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் தேசிய அரசியலில் மிகப்பெரிய உயரங்களை தலைவராக இருந்தார். அவர் மனது வைத்திருந்தால் பாரத பிரதமராக வந்து இருக்கலாம். தமிழர் ஆன அவரை காங்கிரஸ் வளரவிடாமல் செய்துவிட்டது. 

ஐயா பெருந்தலைவர் கே.காமராஜரை நினைவு கூறுகிறேன். அரசியலில் நேர்மை என்றால் அவர் முகம் தான் நினைவுக்கு வருகிறார். அவர் உருவாக்கிய மதிய உணவு திடம் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. 

அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமனாது. ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் காலம் அது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மக்கள் புதிய சாதனையை படைக்க பாஜகவினர் அனைவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும். 

நமது நாட்டில் உள்ள தமிழ் மொழி என்று பிறந்தது என்று தெரியவில்லை; அதன் பெருமை யாருக்குமே தெரியவில்லை. உலகின் மிகத் தொன்மையான மொழி என் நாட்டின் தமிழ் மொழி, உங்களிடம் தமிழில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. நமோ இன் தமிழ் என்ற எக்ஸ் தளத்தில் எனது தமிழ் உரைகள் இடம்பெறும். 

WhatsApp channel