தமிழ் செய்திகள்  /  Elections  /  Nearly 17 Lakh Fake Voters In West Bengal, Bjp Delegation Submits Reports To Election Commission

Fake Voters List: மேற்குவங்கம் ஷாக்! 17 லட்சம் போலி வாக்காளர்கள்? 24 பைகளில் தேர்தல் அலுவலகத்தில் சமர்பிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 29, 2024 07:56 PM IST

மேற்கு வங்கத்தில் உள்ள 17 லட்சம் போலி வாக்காளர்கள் அடங்கிய பட்டியலை மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்.

மேற்கு வங்கம் எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கம் எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி (Saikat Paul)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பட்டியலில் இறந்த வாக்காளர்கள் மற்றும் இடம்பெயர்ந்து சென்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பலமுறை வெவ்வேறு இடங்களின் பட்டியல்களிலும் இடம்பிடித்த பெயர்களும் ஏராளமாக இருந்துள்ளன.

அத்துடன், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு இடையே உள்ள வாக்கு வித்தியாசத்துக்கு, கிட்டத்தட்ட சமமான அளவில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"போலி வாக்காளர்கள் தொடர்பாக 14 ஆயிரத்து 267 பக்கம் ஆவணத்தை சமர்ப்பிப்பதை தவிர, பென்-டிரைவில் சேமிக்கப்பட்ட நகல் வடிவத்தில் விவரங்களையும் சமர்ப்பித்திருப்பதாக" எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் மேற்கு வங்காளத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இருக்கும் தேர்தல் ஆணையம் சார்பில், அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிய உள்ளது. அப்போது போலி வாக்காளர்கள் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய குழுவிடம் தெரிவிப்போம் எனவும் கூறினார்.

இதையடுத்து இந்த போலி வாக்காளர் குற்றச்சாட்டு அனைத்தும் போலியானவை என ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel