PM Modi : மீண்டும் பிரதமர் ஆகும் மோடி - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு கடிதம்!
Modi becomes PM Again : ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. நேற்றைய தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைகாத சூழல் உருவாகி உள்ளது.
யார் யார் எத்தனை தொகுதிகளில் வெற்றி?
240 தொகுதிகளில் வென்று பாஜக தனி பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 12 இடங்களிலும், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கட்சி 7 இடங்களிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும்,
ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி 4 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதள் கட்சி 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி 4 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களிலும், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி 3 இடங்களிலும், ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், சிபிஐ.எல்.எல் கட்சி 2 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும், சிபிஐ கட்சி 2 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தள் கட்சி 2 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இணைந்து 18 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு டிமாண்ட்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு உடன் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் பிரதமராக மோடி
இந்நிலையில் ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார். சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு கடிதம் அளித்தனர். இதன்மூலம் கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு
முன்னதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை தனது கட்சி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (என்.டி.ஏ) இருக்கும் என்று வலியுறுத்தினார். 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 164 இடங்களில் வெற்றி பெற்றன.
அமராவதியில் உள்ள உண்டவல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, இந்தியா கூட்டணி கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு அழைப்பு வருவது குறித்த ஊகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான ஜேஎன்பி 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் கிடைத்தன.மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், ஜே.என்.பி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்