Loksabha Election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேதி குறித்த தேர்தல் ஆணையம்’ என்ன தேதி தெரியுமா?
“Loksabha Election 2024: இந்தியாவை பொறுத்தவரை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கி மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது”

தேர்தல் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களை தயார் செய்யும் அதிகாரிகள் - கோப்புப்படம் (PTI)
வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெறுவது வழக்கம். பாதுகாப்பு பிரச்னைகள் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி கவனம் செலுத்தும் வகையில் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்கிறது.