Lok Sabha polls phase 3: 3வது கட்ட மக்களவைத் தேர்தல்..93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் யார்?
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Polls Phase 3: 3வது கட்ட மக்களவைத் தேர்தல்..93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் யார்?

Lok Sabha polls phase 3: 3வது கட்ட மக்களவைத் தேர்தல்..93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் யார்?

Karthikeyan S HT Tamil
May 07, 2024 07:04 AM IST

Lok Sabhs phase 2024: மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் வழங்கிய தரவுகளின்படி, முதல் கட்ட தேர்தலில் 62% வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 60.96% (தற்காலிகமாக) வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 1,625 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 1,198 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 1,229 பேர் ஆண்கள். 123 பேர் பெண்கள் ஆவர். 

முக்கிய வேட்பாளர்கள்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சோனல் படேல் களமிறங்கி உள்ளார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெய்வீர் சிங் களம் காண்கிறார்.

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தின் குணா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Lok Sabha Election 2024: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தேதி

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெறும்.

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தின் 26 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு

அசாம்: துப்ரி, கோக்ரஜார், பார்பேட்டா, கவுகாத்தி

பீகார்: ஜான்ஜார்பூர், சுபால், அராரியா, மாதேபுரா, ககாரியா

சத்தீஸ்கர்: சர்குஜா, ராய்கர், ஜஞ்ச்கிர்-சம்பா, கோர்பா, பிலாஸ்பூர், துர்க், ராய்ப்பூர்

கோவா: வடக்கு கோவா, தெற்கு கோவா

குஜராத்: கட்ச், பனஸ்கந்தா, படான், மகேசனா, சபர்கந்தா, காந்திநகர், அகமதாபாத் கிழக்கு, அகமதாபாத் மேற்கு, சுரேந்திரநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜுனாகத், அம்ரேலி, பாவ்நகர், ஆனந்த், கேடா, பஞ்ச்மஹால், தாஹோத், வதோதரா, சோட்டா உதய்பூர், பருச், பர்தோலி, சூரத், நவ்சாரி, வல்சாத்

கர்நாடகா. சிக்கொடி, பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பெல்லாரி, ஹவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிமோகா

மத்தியப் பிரதேசம்: பிந்த், போபால், குணா, குவாலியர், மொரேனா, ராஜ்கர், சாகர், விதிஷா

மகாராஷ்டிரா: பாராமதி, ராய்காட், உஸ்மானாபாத், லத்தூர் (தனி), சோலாப்பூர் (தனி), மாதா, சாங்லி, சதாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கானங்கள்

உத்தரப் பிரதேசம்: சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா (SC), ஃபதேபூர் சிக்ரி, ஃபிரோசாபாத், மைன்புரி, எட்டா, புடவுன், ஆன்லா, பரேலி

மேற்கு வங்கம்: மல்டாஹா உத்தர், மல்தாஹா தக்ஷின், ஜாங்கிபூர், முர்ஷிதாபாத்

தாத்ரா மற்றும் ஹவேலி / டையூ - டாமன்

ஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக்-ரஜோரி

லோக்சபா தேர்தல் 2024: முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.