தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Loksabha Election 2024: ‘எனது ஓட்டு மோடிக்கு’ என கூறிய இளைஞருக்கு தெலங்கானா முதல்வரின் அட்வைஸ் என்னன்னு பாருங்க

Loksabha Election 2024: ‘எனது ஓட்டு மோடிக்கு’ என கூறிய இளைஞருக்கு தெலங்கானா முதல்வரின் அட்வைஸ் என்னன்னு பாருங்க

Manigandan K T HT Tamil
Apr 15, 2024 08:51 AM IST

Loksabha Election 2024: ஆம் ஆத்மி கி அதாலத் நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி, “நீங்கள் இளைய தலைமுறை, படித்த, விவேகமுள்ள, முதல் முறையாக வாக்களிக்கப் போகிறீர்கள். யாருக்கு வாக்களிப்பது என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்” என்றார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (ANI Photo)
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (ANI Photo) (Tharun Vinny)

ட்ரெண்டிங் செய்திகள்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் ரஜத் சர்மா தொகுத்து வழங்கிய 'ஆப் கி அதாலத்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் பார்வையாளர்களில் இருந்து ஒருவர் மோடிக்கு வாக்களிப்பேன் என்று கூறுகிறார்.

வைரலான இந்த வீடியோவில், “முதன்முறையாக வாக்களிக்கப் போகும் நாட்டு இளைஞர்கள், கவனமாக சிந்தித்து தங்கள் முடிவைப் பரிசீலித்து வாக்களிக்குமாறு” ரெட்டி அறிவுறுத்துவதைக் காண முடிகிறது.

ஆம் ஆத்மி கி அதாலத் நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி, “நீங்கள் இளைய தலைமுறை, படித்த, விவேகமுள்ள, முதல் முறையாக வாக்களிக்கப் போகிறீர்கள். யாருக்கு வாக்களிப்பது என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்” என்றார்.

ரெட்டி இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கும்போது, ஒரு நபர் சிலாகித்து மோடிக்கு வாக்களிப்பேன் என்று கூறினார். இதுகுறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், "உங்கள் வாக்கை யாருக்கு வேண்டுமானாலும் அளியுங்கள். உங்கள் குடும்பம் கூடுதலாக 100 லட்சம் கோடி கடனில் சுமையாக இருக்கும்" என்றார்.

உண்மையில், பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ரேவந்த் ரெட்டி, "மோடி நாட்டின் பிரதமராவதற்கு முன், அவருக்கு முன் 14 பிரதமர்கள் 67 ஆண்டுகளில் 65 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, நாட்டின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மறுபுறம், மோடியே தனது பத்தாண்டு கால ஆட்சியில் 113 கோடி கடன் வாங்கினார். இந்தப் பணம் எங்கே போனது? அது யாருடைய பாக்கெட்டில் போனது? மோடி நாட்டுக்காக என்ன செய்தார்?

இதுபோன்ற கேள்விகளை கேட்பது எனது பொறுப்பு மட்டுமல்ல. இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதற்கு நாட்டின் இளைஞர்களுக்கும் பொறுப்பு உள்ளது." என்றார்.

நேர்காணலின் போது. “400 இடங்களை வெல்வோம்” என்ற முழக்கத்தை உருவாக்கினாலும், பிரதமர் மோடி “இந்த முறை அதிகபட்சமாக 214 முதல் 240 மக்களவைத் தொகுதிகளை வெல்ல முடியும்” என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

இதனிடையே, “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்