தமிழ் செய்திகள்  /  Elections  /  South Chennai Lok Sabha Constituency Dmk Candidate Thamizhachi Thangapandian Asset Value Details

Thamizhachi: ’தங்கம் தென்னரசுக்கு 10 லட்சம் கடன்! ஒரு TVS XL !’ தமிழச்சி தங்கபாண்டியன் சொத்து விவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Mar 26, 2024 05:36 PM IST

”South Chennai: ஜம்பு அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு 5 லட்சம் கடனும், தனது சகோதரரும் நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவுக்கு 10 லட்சம் கடனும் அளித்துள்ளதாக தனது வேட்புமனுவில் கூறி உள்ளார்”

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்

ட்ரெண்டிங் செய்திகள்

தென் சென்னை வேட்பாளர்கள்

தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுத்தாக்கல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வேட்புமனுத்தாக்கலில் என்ன இருக்கும்?

வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளர் மற்றும் அவரை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி வைப்புத் தொகை, நிறுவனங்களில் வைத்திருக்கும் பரஸ்பர நிதி மற்றும் நிறுவன பங்குகள், காப்பீடு குறித்த விவரங்கள், கடன் பத்திரங்கள், தனிநபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ அளித்துள்ள கடன் விவரங்கள், கடன் வாங்கிய விவரங்கள், மோட்டார் வாகனங்கள் குறித்த விவரங்கள், வேட்பாளர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வேட்புமனுத்தாக்கல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

சொத்து விவரம் 

தன்மீது எந்த விதமான குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழச்சி தங்கபாண்டியன், தனது பெயரில் ஒரு கோடியே 61 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளதாக கூறி உள்ளார். 

சாஸ்விதா ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குகள் உள்ளதாகவும், 8 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி பாலிசி உள்ளதாக கூறி உள்ள தமிழச்சி, ஜம்பு அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு 5 லட்சம் கடனும், தனது சகோதரரும் நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவுக்கு 10 லட்சம் கடனும் அளித்துள்ளதாக தனது வேட்புமனுவில் கூறி உள்ளார்.

இன்னோவா கிரிஸ்டா ரக காரும். டிவிஎஸ் எக்ஸ்.எல். ரக வாகனமும் தனது பெயரில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், 1270 கிராம் தங்கமும். 1.5 கிலோ வெள்ளியும் உள்ளதாக கூறி உள்ளார். அசையா சொத்துக்களை பொறுத்தவரை, 8 கோடியே 97 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தமிழச்சி தங்கபாண்டியன் கூறி உள்ளார்.

WhatsApp channel