தமிழ் செய்திகள்  /  Elections  /  Parliamentary Elections 2024: List Of Congress Proposed Candidates To Contest In Tamil Nadu And Puducherry

TN Congress Candidate List 2024: ’சசிகாந்த் செந்தில் முதல் பிரவீன் சக்ரவர்த்தி வரை!’ காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல்

Kathiravan V HT Tamil
Mar 19, 2024 11:35 AM IST

”நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பனுவை நேற்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்கத் தொடங்கி உள்ளது”

காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்
காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தொகுதிகள் மாற்றம்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேனி தொகுதிக்கு பதிலாக திருநெல்வேலி தொகுதியும், திருச்சி தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியும், ஆரணி தொகுதிக்கு பதிலாக கடலூர் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மயிலாடுதுறை தொகுதி

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் தொகுதி 

கடலூர் தொகுதியில் ஏற்கெனவே கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

திருநெல்வேலி தொகுதி 

திருநெல்வேலி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் 2004 மற்றும் 2009 தேர்தல்களில் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.எஸ்.ராமசுப்பு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்!

  1. திருவள்ளூர்- சசிகாந்த் செந்தில் அல்லது விஸ்வநாதன்
  2. கிருஷ்ணகிரி - செல்லக்குமார்
  3. கடலூர் - கே.எஸ்.அழகிரி
  4. மயிலாடுதுறை - பிரவீன் சக்ரவர்த்தி அல்லது மணிசங்கர் ஐயர் மூத்த மகள் சுரண்யா ஐயர்
  5. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம் 
  6. விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
  7. கன்னியாகுமரி - விஜய் வசந்த்
  8. கரூர் - ஜோதிமணி
  9. புதுச்சேரி - வைத்திலிங்கம்
  10. திருநெல்வேலி - பீட்டர் அல்போன்ஸ் அல்லது திருநாவுக்கரசர்

விருப்பமனுவை கேட்கும் காங்கிரஸ்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பனுவை நேற்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்கத் தொடங்கி உள்ளது. 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை விளவங்கோடு இடைத்தேர்தல் உட்பட 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் 500 ரூபாய் செலுத்தி  விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை வரும் 20ஆம் தேதி மதியம் ஒரு மணிக்குள் பொதுத் தொகுதிக்கு 30 ஆயிரமும், தனித் தொகுதி மற்றும் மகளிருக்கு 15 ஆயிரமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை விண்ணப்பம் செலுத்தும் போது 10 ஆயிரமும், மகளிருக்கு 5 ஆயிரம் மும் நன்கொடை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp channel