தமிழ் செய்திகள்  /  Elections  /  Parliamentary Elections 2024: Congress Party Releases Preliminary List Of 39 Candidates Including Rahul Gandhi

Congress candidate list: ’வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் போட்டி!’ முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

Kathiravan V HT Tamil
Mar 08, 2024 07:32 PM IST

’Congress candidate list: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியும், திருவனந்தபுரத்தில் சசிதரூரும், பெங்களூரு புறநகரில் டி.கே.சுரேஷும் போட்டி என அறிவிப்பு’

ராகுல் காந்தி
ராகுல் காந்தி (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

பெங்களூரு ஊரக தொகுதியில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷும், கண்ணூரில் கே.சுதாகரனும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலபுழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

39 வேட்பாளர்களில் 15 பேர் பொது பிரிவையும், 24 பேர் பட்டியல் மற்றும் சிறுபான்மை சமூகத்தையும் சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று (மார்ச் 07) நடைபெற்ற மத்திய தேர்தல் குழுவின் முதல் கூட்டத்தில் இந்த வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யபப்ட்டது. 

பாரத் நியாய் யாத்திரையை குஜராத் மாநிலத்தில் மேற்கிண்டு வரும் ராகுல் காந்தி காணொலி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.  

சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்-  கேரளா 

1. காசர்கோடு- ராஜ்மோகன் உன்னிதன்

2. கண்ணூர்- கே.சுதாகரன்

3. வடகரா- ஷாபி பரம்பில்

4. வயநாடு- ராகுல் காந்தி

5. கோழிக்கோடு- எம்.கே.ராகவன்

6. பாலக்காடு- வி.கே.ஸ்ரீகண்டன்

7. ஆலத்தூர் (SC)-திருமதி. ரம்யா ஹரிதாஸ்

8. திருச்சூர்- கே.முரளீதரன்

9. சாலக்குடி- பென்னி பஹன்னன்

10. எர்ணாகுளம்- ஹைபி ஈடன்

11. DUKKI- டீன் குரியகோஸ்

12. மாவேலிக்கரா (SC)- கொடிக்குன்னில் சுரேஷ்

13. பத்தனம்திட்டா- ஆண்டோ ஆண்டனி

14. அட்டிங்கல்- அடூர் பிரகாஷ்

15. திருவனந்தபுரம்- டாக்டர் சசி தரூர்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்- கர்நாடகா 

  1. பிஜாப்பூர் (SC)- HR அல்குர் (ராஜூ)
  2. ஷிமோகா- ஸ்ரீமதி. கீதா சிவராஜ்குமார்
  3. ஹாசன்- எம். ஷ்ரேயாஸ் படேல்
  4. தும்கூர் - எஸ்பி முத்தஹனுமேகவுடா
  5. மாண்டியா - வெங்கடராமகவுடா (நட்சத்திரம் சந்துரு)
  6. பெங்களூர் ரூரல்- டி.கே.சுரேஷ்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - சத்தீஸ்கர் 

  1. ஜாங்கிர் - சம்பா (SC)- டாக்டர் ஷிவ்குமார் தஹாரியா
  2. கோர்பா- செல்வி. ஜோத்சனா மஹந்த்
  3. ராஜ்நந்த்கான்- பூபேஷ் பாகேல்
  4. DURG- ராஜேந்திர சாஹு
  5. ராய்ப்பூர்- விகாஸ் உபாதயாய்
  6. மஹாசமுந்த்- தர்த்வாஜ் சாஹு

லட்சத்தீவு

  1. லட்சத்தீவு (எஸ்டி): முகமது ஹம்துல்லாஹா சயீத்

மேகாலயா

  1. வின்சென்ட் எச் பாலா
  2. சலெங் அ சங்மா

நாகாலாந்து

  1. எஸ் சுபோங்மெரென் ஜமீர்

சிக்கிம்

  1. கோபால் செட்ரி

தெலுங்கானா

  1. சுரேஷ் குமார் ஷெட்கர்
  2. சல்லா வம்ஷி சந்த் ரெட்டி
  3. ரகுவீர் குண்டூரு
  4. பல்ராம் நாயக் போரிகா

திரிபுரா

  1. ஆசிஷ் குமார் சாஹா

அமேதியில் போட்டியிடுவாரா ராகுல் காந்கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாட்டில் வெற்றியும், அமேதியில் தோல்வியும் அடைந்தார். ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்று இருந்தார். இந்த நிலையில் இந்த தேர்தலிலும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுதுள்ளது. 

 

WhatsApp channel