தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election: ‘இந்தியாவிற்கு தான் வெற்றி’ வாக்களித்த முதல்வர் ஸ்டாலின் கருத்து! கனிமொழி உள்ளிட்டோர் வாக்களித்தனர்

Lok Sabha election: ‘இந்தியாவிற்கு தான் வெற்றி’ வாக்களித்த முதல்வர் ஸ்டாலின் கருத்து! கனிமொழி உள்ளிட்டோர் வாக்களித்தனர்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 19, 2024 09:29 AM IST

Lok Sabha election 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை செயின்ட் அப்பாஸ் பள்ளியில் திமுக வேட்பாளர் கனிமொழி வாக்களித்தார்.

‘இந்தியாவிற்கு தான் வெற்றி’ வாக்களித்த முதல்வர் ஸ்டாலின் கருத்து! கனிமொழி உள்ளிட்டோர் வாக்களித்தனர்
‘இந்தியாவிற்கு தான் வெற்றி’ வாக்களித்த முதல்வர் ஸ்டாலின் கருத்து! கனிமொழி உள்ளிட்டோர் வாக்களித்தனர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்

தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் நீங்கள் நினைப்பது போல் ‘இந்தியாவிற்கு தான் வெற்றி’ என தெரிவித்தார். 

வாக்களித்தார் கனிமொழி

சென்னை செயின்ட் அப்பாஸ் பள்ளியில் திமுக வேட்பாளர் கனிமொழி வாக்களித்தார்.

பாலகிருஷணன் சிபிஎம்

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்களித்தார்

ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாக்கினை பதிவு செய்தார்.

துரை வைகோ

மதிமுக சார்பில் திருச்சியில் போடியிடும் துரை வைகோ தென்காசி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்ஐஏஎஸ் , கொளத்தூர் பெரியார் நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அண்ணாமலை

கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசி அண்ணாமலை கூறியதாவது, 

"ஒரு தர்மத்தின் போராட்டம், நியாத்தின் போராட்டம் என்பதால் களத்தில் எல்லோரையும் எதிர்த்து நின்று கொண்டு இருக்கின்றேன். பணத்தை வைத்து கோயம்புத்தூர் மக்களை வாங்கிவிடலாம் என திமுக மற்றும் வேறுவேறு கட்சிகள் நினைக்கின்றனர்.

ஆனால் அதற்கு மக்கள் தகுந்த பதில் அடி கொடுப்பார்கள். பண அரசியல் என்பது இந்த தேர்தலோடு முடிந்துவிட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்கு முன்னால் வந்த பணம் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்பது முடிந்துவிட்டது.

திமுக, உளவுத்துறை, தலைமை செயலாளர், டிஜிபி, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆபிசரில் யாராவது ஒருத்தர் பாஜக பணம் கொடுக்க முயன்றது என்பதை சொல்லட்டும் நான் அரசியலைவிட்டு வெளியேறிவிடுகிறேன்."  என்றார். 

செல்போனுக்கு தடை

தேர்தலில் வாக்கு அளிக்க செல்லும் பகுதியில் வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களை வெளியில் வைத்து செல்லவும் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel