தமிழ் செய்திகள்  /  Elections  /  Lok Sabha Election 2024: Bjp's 2nd List Of Ls Candidates: Khattar From Karnal, Nitin Gadkari Nagpur

Lok Sabha election 2024: ’கட்கரி முதல் தேஜஸ்வி சூர்யா வரை!’ பாஜக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

Kathiravan V HT Tamil
Mar 13, 2024 07:32 PM IST

”Lok Sabha election 2024: பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது”

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டி (Snehal Sontakke)

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜகவின் முக்கிய முகங்களான  மனோகர் லால் கட்டார், நிதின் கட்கரி, அனுராக் தாக்கூர், பியூஷ் கோயல் மற்றும் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் அடங்கிய 72 வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை பாஜக  வெளியிட்டுள்ளது. 

ஹரியான முதலமைச்சர் பதவியை பாஜகவின் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்த நிலையில், அவர் கர்னல் தொகுதில் இருந்து போட்டியிடுவார் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பெயர் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

முன்னதாக பாஜக வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான நிதின் கட்கரியின் பெயர் இடம்பெறவில்லை. நிதின் கட்கரியை பாஜக ஓரங்கட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், 

பாஜக நிதின் கட்கரியை அவமதித்தால் அக்கட்சியை விட்டு வெளியேறி தனது முகாமில் சேருமாறு உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டு இருந்தார். 

இது தொடர்பாக பதில் அளித்திருந்த நிதின் கட்கரி, இந்த அழைப்பு முதிர்ச்சியற்றது மற்றும் அபத்தமானது என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், தான் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நாக்பூர் தொகுதியில் நிதின்கட்கரி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு பெங்களூர் தொகுதியில் தேஜஸ்வி சூர்யா, ஹவேரி தொகுதியில் கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஷிமோகா தொகுதியில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவ்க்கப்பட்டுள்ளது. 

மைசூர் மக்களவைத் தொகுதியில் பிரதாப் சிம்ஹாவுக்கு பதிலாக முன்னாள் மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் பெயர் அறிவித்துள்ளது. 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

முன்னதாக, வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலில் 195 பெயர்களை அக்கட்சி அறிவித்தது. 

உத்தரப் பிரதேசத்தில் இருந்து 51 வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் இருந்து 20 வேட்பாளர்கள், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 24 வேட்பாளர்கள், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா 15 வேட்பாளர்கள், கேரளாவில் இருந்து 12 வேட்பாளர்கள், தெலுங்கானாவில் இருந்து 9 வேட்பாளர்கள், அசாமில் இருந்து 11 வேட்பாளர்கள், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து தலா 11 இடங்களுக்கு வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. 

நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், பாஜகவும் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

வரும் மார்ச் மூன்றாவது வாரத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இரண்டு தேசிய கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel