Annamalai BJP: ரோட்ஷோ வரட்டும் முதல்வர்.. சவால் விடுத்த அண்ணாமலை! இந்தியில் பேசி பிரச்சாரத்தில் அதிரடி
Annamalai BJP: பூ மார்கெட் தெப்பக்குளம் வீதியில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளார். நாளை தேனியில் அமுமுக தலைவர் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Annamalai BJP: கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். அவரோடு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.
பூ மார்கெட் தெப்பக்குளம் வீதியில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளார். நாளை தேனியில் அமுமுக தலைவர் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்கிறார். அடுத்த நாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற்று, பின்னர் கேரளா செல்கிறார்.
பிரதமர் தமிழகம் வருவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உறுதியான தகவல்கள் கிடைத்ததும் நாளை தெரிவிக்கப்படும் என்றார்.
சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உரிய காலத்தில் முன்கூட்டியே கட்சி சின்னத்திற்காக விண்ணப்பம் அளிக்காமல் இருந்ததால் சின்னம் தற்போது கிடைக்கவில்லை. இதனால் தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இதனை மறைப்பதற்காக என் மீதும் பாஜக மீதும் குற்றம் சாட்டி வருகிறார் என்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டாலும் அதனால் எந்த பலனும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என விமர்சித்தவர்,
முதல்வர் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கும் போது தான் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி குறித்து முதல்வர் தெரிந்து கொள்ள முடியும் என கூறினார்.
மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மேற்கொள்வது போல் ரோட்ஷோ எனப்படும் வாகன பேரணியை நடத்தி மக்களை சந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் ஏன் அதை செய்வதில்லை என கேள்வி எழுப்பினார்.
அதேசேமயம் கச்சத்தீவு விவகாரத்தை பொருத்தவரை அது குறித்த தகவல்களை ஆர்டிஐ மூலம் பெற்று பாஜக மக்கள் முன்பு வைத்துள்ளது. மக்கள் இப்போது அதைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளனர். எங்களது ஜனநாய கடமையை நாங்கள் செய்துள்ளோம். மக்கள் அதற்கு ஆதரவளித்துள்ளனர்.
மேலும் கச்சத்தீவு விவகாரத்தை தற்போது பேசி வருவதால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு எந்த விதத்திலும் பாதிக்காது. பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து சரியாகவே பேசியுள்ளனர் என கூறியவர்,
கொங்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சி கட்டாயம் வெற்றி பெறும் எனவும்,மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் மாநிலத்தை ஆளும் திமுகவிற்கும் தான் போட்டி என்பதை நீண்ட காலமாக தான் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக அரசியலுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என கூறியவர்.இந்திப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை திமுக வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும், தேர்தலுக்குப் பிறகு பாஜக அந்த ஆவணங்களை கட்டாயம் வெளியிடும். அவர்களின் பெயரை பயன்படுத்தி திமுக தான் அரசியல் செய்து வருகிறது.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து பெரியார் கடுமையாக விமர்சித்துள்ளார். அதை திமுகவினர் ஏற்றுக்கொள்வாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக வேட்பாளர்கள் ஹிந்தியில் போஸ்டர் அடித்தும், ஹிந்தியில் பிரச்சாரமும் செய்துள்ளனர். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
